நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image

செய்திகள் மலேசியா

By
|
பகிர்

எஸ்பிஎம் முடித்த மாணவர்கள் அரசு உயர் கல்விக்கூடங்களை முதல் தேர்வாக கொண்டிருக்க வேண்டும்: சைட் அஹ்மத்

கோலாலம்பூர்:

எஸ்பிஎம் முடித்த மாணவர்கள் அரசு உயர் கல்விக்கூடங்களை முதல் தேர்வாக கொண்டிருக்க வேண்டும்.

லெம்பா ஜெயா சட்டமன்ற உறுப்பினர் சைட் அஹ்மத் இதனை வலியுறுத்தினார்.

கடந்த 2025ஆம் ஆண்டு எஸ்பிஎம் தேர்வு எழுதிய மாணவர்களின் முடிவுகள் அண்மையில் வெளியானது.

இதில் அதிகமான மாணவர்கள் முழு தேர்ச்சியை பெற்றனர். அதே வேளையில் சிறப்பான தேர்ச்சி பெறவில்லை.

எது எப்படி இருந்தாலும் மாணவர்கள் தங்களின் தேர்வு முடிவுகளை அடிப்படையாக உயர் கல்விக்கு விண்ணப்பம் செய்லாம்.

இதில் அரசு உயர் கல்விக்கூடங்களை மாணவர்கள் முதல் தேர்வாக கொண்டிருக்க வேண்டும்.

இதன் அடிப்படையில் தான் அரசாங்க உயர் கல்விக்கூடங்களே எனது முதல் தேர்வு என்ற கோட்பாடுடன் சிறப்பு வழிகாட்டல் பட்டறை ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

இப்பட்டறை வரும் ஏப்ரல் 10ஆம் தேதி மாலை 6.30 மணிக்கு அம்பாங் ஸ்ரீ மகா நாகேஸ்வரி அம்மன் ஆலயத்தில் நடைபெறவுள்ளது.

லெம்பா ஜெயா சட்டமன்ற மக்கள் சேவை மையம், அம்பாங்,பாண்டான் கிராமத் தலைவர்கள், கியூமிக், ஈடபள்யூஆர்எப், கோபியோ ஆகிவற்றின் கூட்டு முயற்சி இந்நிகழ்வு நடைபெறவுள்ளது.

அரசாங்க பல்கலைக்கழகங்களை தவிர்த்து திவேட் பயிற்சி மையங்கள் என அனைத்து அரசு உயர் கல்விக் கூடங்கள் குறித்து இங்கு விளக்கமாக எடுத்துக் கூறப்படும்.

ஆகவே மாணவர்கள் திரளாக வந்து இந்நிகழ்ச்சியில் கலந்து கொள்ள வேண்டும் என்று அவர் கேட்டு கொண்டார்.

இந்நிகழ்ச்சி குறித்த மேல்விவரங்களுக்கு சூர்யாவை 0163556914 தொடர்பு கொள்ளலாம்.

- பார்த்திபன் நாகராஜன்

தொடர்புடைய செய்திகள்

Copyright © 2026, நம்பிக்கை செய்திகள்

+ - reset