செய்திகள் வணிகம்
மலேசியப் பொருளாதாரம் 4.6% வளர்ச்சி காணும்: ஆம்ரோ
கோலாலம்பூர்:
மேற்கு ஆசியாவில் நிலவும் மோதல், அமெரிக்காவின் கட்டணக் கொள்கைகளின் நிச்சயமற்ற தன்மை போன்ற சவால்களுக்கு மத்தியிலும், மலேசியாவின் பொருளாதாரம் இந்த ஆண்டு 4.6 சதவீதம் வளரும் என எதிர்பார்க்கப்படுகிறது.
ASEAN+3 மேக்ரோ பொருளாதார ஆராய்ச்சி அலுவலகத்தின் (ஆம்ரோ) அறிக்கையின்படி, நாட்டின் பணவீக்கமும் 2027 ஆம் ஆண்டு வரை 2.0 சதவீதத்தில் நிலையாக இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
மலேசியாவின் பொருளாதாரச் செயல்திறன் தொடர்ந்து வலுப்பெறும் என்றும், அடுத்த ஆண்டு 4.7 சதவீத வளர்ச்சி இருக்கும் என்றும் ஆம்ரோ கூறியுள்ளது.
இதற்கிடையில், சீனா, ஜப்பான், தென் கொரியாவை உள்ளடக்கிய ஆசியான் பிளஸ் த்ரீ பொருளாதாரமானது, 2027 ஆம் ஆண்டு வரை 4.0 சதவீதம் வளரும் என எதிர்பார்க்கப்படுகிறது.
பலவீனமான வெளிப்புற தேவை, அமெரிக்காவின் உலகளாவிய கட்டணங்களைச் செயல்படுத்துவதே இந்த மெதுவான விரிவாக்கத்திற்கான எதிர்பார்ப்புக்குக் காரணமாகும்.
இதைச் சமாளிக்கும் வகையில், தொழில்நுட்ப முதலீடுகள் செமிகண்டக்டர்கள், மின்னணுவியல் பொருட்களுக்கான ஏற்றுமதித் தேவையைத் தூண்டும் என எதிர்பார்க்கப்படுகிறது.
வலுவான தொழிலாளர் சந்தை நிலைமைகள் காரணமாக, உள்நாட்டுத் தேவையும் வலுவாகவே இருக்கும் என கணிக்கப்பட்டுள்ளது.
-சங்கீர்த்தனா
தொடர்புடைய செய்திகள்
October 5, 2026, 10:07 pm
டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு தொடர்ந்து சரிவு
October 5, 2026, 3:40 pm
சீரகத் தூளில் பூச்சிக்கொல்லி மருந்து: உடனடியாக அகற்ற இந்திய அரசு உத்தரவு
September 26, 2026, 12:30 pm
வட அமெரிக்காவில் மேலும் 250 கடைகளை மூடும் Starbucks
September 11, 2026, 4:22 pm
ஃபேன்சி அகாடாமி அணிச்சல், பேக்கரி துறையில் திறமையான சாதனையாளர்களை உருவாக்கும்: விக்னேஸ்வரி நம்பிக்கை
September 11, 2026, 3:07 pm
இந்தியாவில் iPhone விலை 41% வரை அதிகரிப்பு
September 6, 2026, 5:39 pm
சிங்கப்பூரில் curry puff வாங்க சீனாவிலிருந்து வந்த விநியோக ஊழியர்
September 2, 2026, 4:36 pm
இந்தியாவின் முன்னணி பெருங்காய நிறுவனங்களான எல்ஜி, எவரெஸ்ட் நிறுவனப் பெருங்காயங்கள் விற்பனைக்கு தடை
August 31, 2026, 8:14 pm
சிங்கப்பூரில் உத்தரவாதமில்லாக் கடன் பெறுவோர் - மறுபரிசீலனை செய்ய 3 நாள் அவகாசம்
August 30, 2026, 9:46 pm
கே8 சரக்குகளைக் கையாள்வது குறித்து அரசும், ஏஜென்சிகளும் தெளிவுபடுத்த வேண்டும்
August 26, 2026, 11:58 am
