நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image

செய்திகள் மலேசியா

By
|
பகிர்

பெண்களை மேம்படுத்தும் முயற்சிகளைத் தொடர்ந்து வலுப்படுத்த வேண்டும்: ஜாஹித்

கோலாலம்பூர்: 

வாழ்க்கை செலவு, உள்நாட்டு பொருளாதாரத்தை பாதிக்கும் உலகளாவிய நிச்சயமற்ற தன்மையில் பெண்களும் அறைகூவல்களை எதிர்கொள்வதால், நிதியுதவி, டிஜிட்டல் தளங்களில் திறன் பயிற்சி, வணிக வளர்ச்சி வாய்ப்புகளுக்கான அணுகல் மூலம் பெண்களைப் போட்டித்திறனை மேம்படுத்துவதற்கான முயற்சிகளை முழுமையாக தொடர்ந்து வலுப்படுத்த வேண்டும் என்று துணை பிரதமர் டத்தோ ஸ்ரீ அஹமத் ஜாஹித் ஹமிடி கூறினார்.

"நாட்டின் பொருளாதாரத்தை வலுப்படுத்துவதில் பெண்களின் பங்கை விவாதிக்க பல தரப்பினரை ஒன்றிணைக்கும் அர்த்தமுள்ள விவாட தளமான 'Voices of ஹேர்' மன்றத்தை நான் தொடங்கி வைக்கிறேன்.

"குடும்பங்களைக் கட்டியெழுப்பவும், சமூகங்களை மேம்படுத்தவும், பொருளாதார வளர்ச்சியை உந்துவதிலும் பெண்களின் பங்கு மகத்தானது. ஆனால் பங்கேற்பு மட்டும் போதாது.

"பெண்கள் உண்மையிலேயே வலிமையாகவும் தலைமை தாங்கக்கூடியவர்களாகவும் இருக்க, வாய்ப்புகள், சொத்துக்கள், முடிவெடுக்கும் திறன்களைச் சொந்தமாக்கிக்கொள்வதற்கான இடம் வழங்கப்பட வேண்டும்" என்று அவர் தெரிவித்தார்.

ஊரக, பிராந்திய மேம்பாட்டு அமைச்சராகவும் இருக்கும் அவர், அனைத்து தரப்பினரின் ஒத்துழைப்பு, முழுமையான அணுகுமுறை மூலம், மலேசியாவின் பொருளாதார வளர்ச்சியில் பெண்கள் முக்கியமான பங்கைத் தொடர்ந்து வகிப்பதை உறுதிப்படுத்த மிகவும் உள்ளடக்கிய, நியாயமான, நிலையான சூழலைக் கட்டியெழுப்ப முடியும் என்று கூறினார்.

"இன்ஷா அல்லாஹ், நாட்டின் வலுவான, நலமிக்க எதிர்காலத்திற்காக இந்த முயற்சிகள் தொடர்ந்து வலுப்படுத்தப்படும்" என்றார் அவர்.

-சங்கீர்த்தனா

தொடர்புடைய செய்திகள்

Copyright © 2026, நம்பிக்கை செய்திகள்

+ - reset