நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image

செய்திகள் மலேசியா

By
|
பகிர்

உப்சி விளையாட்டு அறையில் ஆண் உயிரிழந்து கண்டுபிடிக்கப்பட்டார்

தஞ்சோங் மாலிம்: 

சுல்தான் இத்ரிஸ் கல்வி பல்கலைக்கழகத்தின் (உப்சி) விளையாட்டு பொருட்கள் வைக்கும் பூட்டிய ஒரு அறையில் சிக்கிக்கொண்டதாக நம்பப்படும் 53 வயது ஆண் இன்று அதிகாலையில் உயிரிழந்த நிலையில் கண்டுபிடிக்கப்பட்டார்.

பேராக் மாநில மலேசிய தேசிய தீயணைப்பு, மீட்பு நிலையத்தின் நடவடிக்கைகள் உதவி இயக்குநர் சாபரொட்சி நோர் அஹ்மத், காலை 1.57 மணிக்கு பூட்டிய அறை கதவை திறக்க உதவி கோரி போலிஸிடமிருந்து அவசர அழைப்பு வந்ததாக கூறினார்.

"சுமார் 9 கிலோமீட்டர் தொலைவிலுள்ள தஞ்சோங் மாலிம் தீயணைப்பு, மீட்பு நிலையத்திலிருந்து ஒரு அணி அந்த இடத்திற்கு அனுப்பப்பட்டு காலை 2.07 மணிக்கு வந்தடைந்தது.

"இடத்திற்கு வந்தபோது உப்சி உதவி போலிஸால் ஏற்கனவே அறை கதவு திறக்கப்பட்டிருந்தது. தீயணைப்பு அணியினர் அந்த இடத்தில் கண்காணிப்பு நடவடிக்கையை மேற்கொண்டனர்" என்று இன்றைய அறிக்கையில் அவர் தெரிவித்தார்.

அப்பல்கலைக்கழகத்தின் ஊழியர் என நம்பப்படும் அந்த ஆடவர், மலேசியா சுகாதார அமைச்சக பணியாளரால் அந்த இடத்திலேயே உயிரிழந்ததாக உறுதிப்படுத்தப்பட்டதாக அவர் கூறினார்.

"பாதிக்கப்பட்டவரின் உடல் போலிஸிடம் ஒப்படைக்கப்பட்டது. நடவடிக்கை காலை 2.17 மணிக்கு கட்டுப்படுத்தப்பட்டு 2.36 மணிக்கு முழுமையாக முடிவடைந்தது" என்று அவர் கூறினார்.

ஒரு தீயணைப்பு மீட்பு டெண்டர் (FRT), அவசர மருத்துவ மீட்பு சேவை (EMRS) குழுவுடன் மொத்தம் ஒன்பது அங்கத்தினர்கள் இந்த நடவடிக்கையில் கலந்துகொண்டனர்.

-சங்கீர்த்தனா

தொடர்புடைய செய்திகள்

Copyright © 2026, நம்பிக்கை செய்திகள்

+ - reset