செய்திகள் இந்தியா
இஸ்ரேல் எங்கள் தந்தை நாடு என்று மோடி சொன்னதுபோல் அங்கு சிக்கியுள்ள இந்தியர்களை தாய்நாட்டிற்கு கொண்டுவர வேண்டாமா?: ஏர் இந்தியா முடிவால் பயணிகள் கவலை
டெல் அவிவ்:
அமெரிக்கா - ஈரான் போரால் கடந்த ஒரு மாதத்திற்கும் மேலாக மேற்காசியாவில் பதற்றம் நிலவுகிறது. அவ்வப்போது வான்வழி தாக்குதல்களும் பிராந்தியத்தில் நடைபெற்று வருகின்றன. இதனால், பல்வேறு நிறுவனங்களும் விமான சேவைகளை நிறுத்தி வருகின்றன. அந்த வகையில், இந்தியாவின் முக்கிய விமான போக்குவரத்து நிறுவனமான ஏர் இந்தியாவும் சேவையை நிறுத்துவதாக கூறியுள்ளது.
அந்த நிறுவனத்தின் உயர் அதிகாரி ஒருவர் நேற்று கூறும்போது, "புது தில்லி - டெல் அவிவ் வழித்தடத்தில் மே 31 வரை விமான சேவைகள் நிறுத்திவைக்கப்பட்டுள்ளன என்றார்.
விமான சேவைகள் நிறுத்திவைக்கப்பட்டிருப்பது, இஸ்ரேலில் வசிக்கும் 50,000-க்கும் மேற்பட்ட இந்தியர்களிடையே பெரும் கவலையை ஏற்படுத்தி உள்ளது.
இஸ்ரேலை விட்டு வெளியேற விரும்பும் இந்தியர்கள், தரைவழி எல்லைகள் வழியாக ஜோர்டான் அல்லது எகிப்து நாடுகளுக்குச் சென்று, அங்கிருந்து பயணிக்க வேண்டியுள்ளது குறிப்பிடத்தக்கது. இதனால் கூடுதல் நேரம் ஆவது மட்டுமின்றி, செலவும் அதிகரிக்கும். ஆபத்தான சூழலில் இப்படியான ஒரு முடிவை எடுத்துள்ள ஏர் இந்தியா தனது முடிவை மறு பரிசீலனை செய்ய வேண்டும் என்பது பயணிகளின் கோரிக்கையாக உள்ளது.
இஸ்ரேல் எங்களது தந்தை நாடு என்று போர் தொடங்குவதற்கு ஒரு நாள் முன்பு மோடி நேரில் சென்று இஸ்ரேலை வாழ்த்திவிட்டு வந்ததுபோல் அங்கு சிக்கியுள்ள இந்தியர்களை தாய் நாட்டிற்கு அழைத்துவர எந்த நடவடிக்கையும் எடுக்காமல் இருப்பது வேதனை அளிக்கிறது என்று அங்கு சிக்கியுள்ள இந்தியர்கள் தெரிவித்தனர்.
- ஆர்யன்
தொடர்புடைய செய்திகள்
October 9, 2026, 6:43 am
வளைகுடா போர் பதற்றம்: இந்திய விமான நிறுவனங்கள் அதிரடியாக உயர்த்திய விமானக் கட்டணங்கள்
October 5, 2026, 4:54 pm
கள்ளக் காதலியுடன் ஊர் சுற்றியபோது காரை இடைமறித்த மனைவியை பானெட்டில் இழுத்து சென்ற கணவர்
October 3, 2026, 3:44 pm
இந்திய விமானி ஸ்மித் மச்சாருக்கு, இஸ்ரேலிய சுற்றுலா பயணிகள் பதாகை ஏந்தி நன்றி தெரிவித்தனர்
October 1, 2026, 8:31 pm
டில்லியில் பெண்களுக்குப் பாதுகாப்பு கோரி மாணவர்கள் ஆர்ப்பாட்டம்
October 1, 2026, 5:55 pm
174 பேர் இருந்த விமானத்தைக் காப்பாற்ற உதவிய இந்திய விமானி
September 30, 2026, 10:34 am
டெல்லியில் இன்று நடைபெறும் ‘இண்டியா’ கூட்டணி கூட்டத்தை திமுக புறக்கணிக்கிறது: டி.கே.எஸ். இளங்கோவன் அறிவிப்பு
September 28, 2026, 1:47 pm
பெங்களூரு விமான நிலைய ஓடுபாதை தரையில் மோதிய இண்டிகோ விமானத்தின் வால் பகுதி
September 26, 2026, 9:26 pm
