நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image

செய்திகள் மலேசியா

By
|
பகிர்

மலாக்காவில் வெடிகுண்டு சத்தம் கேட்டதால் பதற்றம்; அது வெறும் இடிதான்: மெட் மலேசியா

மலாக்கா:

வெடிகுண்டு வெடிப்பைப் போன்றதாகக் கூறப்பட்ட ஒரு பலத்த சத்தம் கேட்டதால் இன்று மலாக்கா அதிகாலை மாநிலத்தின் மூன்று மாவட்டங்களில் வசிக்கும் மக்களிடையே கவலையை ஏற்படுத்தியது.

ஆனால் இது இடியுடன் கூடிய மழையின் காரணமாக ஏற்பட்ட ஒரு இடி நிகழ்வே என மெட் மலேசியா உறுதி செய்துள்ளது.

அதிகாலை 1 மணி முதல் 3 மணி வரை மாநிலத்தைத் தாக்கிய நிலையற்ற வானிலையைத் தொடர்ந்து இந்தச் சம்பவம் நிகழ்ந்தது.

இதுவரை வெடிப்புகள் அல்லது நிலநடுக்கங்கள் போன்ற அசாதாரண சம்பவங்கள் குறித்த எந்த அறிக்கைகளையும் தங்கள் தரப்பு பெறவில்லை என்று மெட் மலேசியாவின் தலைமை இயக்குநர் டாக்டர் ஹிஷாம் முகமது அனிப் கூறினார்.

இதுவரை வெடிகுண்டு வெடிப்பு போன்ற சத்தம் குறித்து எங்களுக்கு எந்தத் தகவலும் கிடைக்கவில்லை.

பதிவுகளின்படி, எந்த நிலநடுக்கமும் பதிவாகவில்லை.

ஆனால் இன்று அதிகாலை 1 முதல் 3 மணி வரை மலாக்காவில் இடியுடன் கூடிய மழை பெய்தது உண்மைதான் ஹிஷாம் கூறினார்.

- பார்த்திபன் நாகராஜன்

தொடர்புடைய செய்திகள்

Copyright © 2026, நம்பிக்கை செய்திகள்

+ - reset