செய்திகள் உலகம்
30 நாட்களில் 50,000 லிட்டருக்கும் அதிகமான எரிபொருளைக் கைப்பற்றியது இலங்கை
கொழும்பு:
கடந்த 30 நாட்களில் சட்டவிரோதமாக மறைத்து வைக்கப்பட்ட 50,000 லிட்டருக்கும் அதிகமான எரிபொருளை இலங்கை கைப்பற்றியுள்ளது. மேலும், நாடு முழுவதும் நடத்தப்பட்ட சோதனைகளில் 31 நபர்களைக் கைது செய்துள்ளது.
போலிஸ் ஊடகப் பேச்சாளர், உதவி கண்காணிப்பாளர் எஃப். யு. வூட்லர், கடந்த மார்ச் 3 முதல் சனிக்கிழமை வரை அந்தத் தீவு முழுவதும் நடத்தப்பட்ட சோதனைகளில் இந்தக் கைதுகள் செய்யப்பட்டதாகச் சின்ஹுவா செய்தி நிறுவனத்திடம் தெரிவித்தார்.
அந்த நடவடிக்கைகளின் போது போலிஸார் 52,000 லிட்டருக்கும் அதிகமான எரிபொருளைக் கைப்பற்றியதாக அவர் கூறினார். இதில் 47,006 லிட்டர் டீசல், 2,668 லிட்டர் பெட்ரோல், 2,706 லிட்டர் மண்ணெண்ணெய் ஆகியன அடங்கும்.
சட்டவிரோத எரிபொருள் இருப்புகள் தொடர்பாகக் கைது செய்யப்பட்ட சந்தேக நபர்களுக்கு எதிராகப் போலிஸார் சட்ட நடவடிக்கையைத் தொடங்கியுள்ளதாக அவர் கூறினார்.
"உலகளாவிய எரிசக்தி நெருக்கடி அதிகரித்து வரும் நிலையில், சட்டவிரோதமாக எரிபொருளை மறைத்து வைத்து பொதுமக்களுக்கு சிரமத்தை ஏற்படுத்தும் நபர்களைக் கைது செய்யுமாறு தேசிய போலிஸ் தலைவர் பிறப்பித்த உத்தரவின் பேரில் இந்த நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டன" என்று அவர் தெரிவித்தார்.
மேற்கு ஆசியாவில் சமீபத்திய இராணுவ மோதல் வெடித்ததிலிருந்து, மோதலால் ஏற்பட்ட எரிபொருள் பற்றாக்குறையைச் சமாளிக்கும் பொருட்டு, எரிபொருள் பதுக்கல், கள்ளச் சந்தை நடவடிக்கைகள் மீதான தனது ஒடுக்குமுறையை இலங்கை அதிகாரிகள் தீவிரப்படுத்தியுள்ளனர்.
-சங்கீர்த்தனா
தொடர்புடைய செய்திகள்
May 26, 2026, 11:20 am
மத்திய கிழக்கில் பலமுனைப் போர்: அதிர்வலைகளில் சிக்கியுள்ளது உலகப் பொருளாதாரம்
May 26, 2026, 10:32 am
ஆப்பிரிக்காவை உலுக்கும் இபோலா: இப்போது ஐரோப்பாவுக்கும் பரவுமா?
May 25, 2026, 11:37 am
பிலிப்பைன்ஸில் கட்டிடம் இடிந்து விழுந்தது: உயிரிழப்புகளின் எண்ணிக்கை அதிகரித்தது
May 25, 2026, 10:59 am
காங்கோவில் பதற்றம்: 2 இபோலா சிகிச்சை நிலையங்களுக்குத் தீ வைத்து கொளுத்திய மக்கள்
May 25, 2026, 9:44 am
பாகிஸ்தானில் ரயில் வெடிப்பில் 24 பேர் உயிரிழந்தனர்
May 24, 2026, 3:55 pm
இபோலா கிருமியால் ஆப்பிரிக்காவின் பிற நாடுகளுக்கும் ஆபத்து: சுகாதார அமைப்பு எச்சரிக்கை
May 24, 2026, 12:37 pm
கலிஃபோர்னியாவில் ரசாயனக் கசிவு: 40,000 மக்கள் வெளியேற உத்தரவு
May 23, 2026, 2:52 pm
