செய்திகள் உலகம்
"நெதன்யாஹுவின் பேச்சை நீங்கள் கேட்டுக்கொண்டு ஆடினால் ஒட்டுமொத்த மத்தியக் கிழக்கும் எரியும்": ட்ரம்பிற்கு ஈரான் எச்சரிக்கை
தெஹ்ரான்:
அமெரிக்கா அதிபர் டொனால்டு ட்ரம்ப், நாளை 8 மணிக்குள் ஈரான் தனது கட்டுப்பாட்டில் உள்ள ஹார்முஸ் நீரிணையை போக்குவரத்திற்குத் திறந்துவிட வேண்டும் என்று ஈரானுக்கு மீண்டும் எச்சரிக்கை விடுத்துள்ளார்.
ஏற்கனவே இது போன்று பல முறை ட்ரம்ப் எச்சரிக்கை விடுத்தும் அதனை ஈரான் கண்டுகொள்ளவில்லை. ட்ரம்ப் விடுத்து வரும் எச்சரிக்கைக்கு ஈரான் பதிலடி கொடுத்துள்ளது.
இது குறித்து ஈரான் பாராளுமன்றத்தின் சபாநாயகர் முஹம்மது பாகர் கலிபாஃப் வெளியிட்டுள்ள செய்தியில், ''உங்கள் பொறுப்பற்ற நடவடிக்கைகள் அமெரிக்காவின் ஒவ்வொரு குடும்பத்தையும் வாழும் நரகத்திற்கு இழுத்துச் செல்கின்றன.
மேலும் நீங்கள் நெதன்யாஹுவின் கட்டளைகளைப் பின்பற்றினால் மத்தியக் கிழக்கு பகுதி முழுவதும் எரிந்து விழும். மீண்டும் எந்தத் தவறும் செய்யாதீர்கள். போர்க் குற்றங்கள் மூலம் நீங்கள் எதையும் பெற மாட்டீர்கள்" என்று குறிப்பிட்டுள்ளார்.
- ஆர்யன்
தொடர்புடைய செய்திகள்
April 6, 2026, 12:32 pm
30 நாட்களில் 50,000 லிட்டருக்கும் அதிகமான எரிபொருளைக் கைப்பற்றியது இலங்கை
April 6, 2026, 11:42 am
முழு பிராந்தியமும் தீக்கிரையாகும்: டிரம்பின் மிரட்டலுக்கு ஈரான் சபாநாயகர் பதிலடி
April 6, 2026, 11:28 am
காஸா முனையில் மனிதாபிமான உதவி: 17 நோயாளிகள் வெளிநாடுகளுக்கு மாற்றம்
April 6, 2026, 11:10 am
வங்கதேசத்தில் தட்டம்மையின் கோரமுகம்: 13 லட்சம் குழந்தைகளுக்கு அவசரத் தடுப்பூசி
April 5, 2026, 12:48 pm
எரிசக்தி நெருக்கடியால் மங்கும் சொங்க்ரான் கொண்டாட்டம்: தாய்லாந்து சுற்றுப்பயணத் துறை கடும் சரிவு
April 5, 2026, 11:46 am
அமெரிக்க வரலாற்றில் முதன்முறையாக ஆளுநர் தேர்தலில் போட்டியிடும் 14 வயது மாணவன்
April 5, 2026, 10:52 am
