செய்திகள் மலேசியா
ரமணனும் ஹசானும் வெளிப்படையாக வாய் வார்த்தைகளால் மோதிக் கொண்டதால் கெஅடிலான் மாநாட்டில் குழப்பம்
ஜொகூர்பாரு:
ஜொகூர் மாநில கெஅடிலான் மாநாட்டில் கெஅடிலான் உதவித் தலைவர் டத்தோஸ்ரீ ஆர். ரமணனுக்கும், பாசிர் கூடாங் நாடாளுமன்ற உறுப்பினர் ஹசன் அப்துல் கரீமுக்கும் இடையே பகிரங்கமான வாக்குவாதம் வெடித்ததால், மாநாட்டில் குழப்பம் ஏற்பட்டது.
உண்மையில் ஹசானும் கலந்துகொண்ட அந்த மாநாட்டில், ரமணன் மேடையில் பேசிக்கொண்டிருந்தபோது இந்த மோதல் ஏற்பட்டது.
இதனால் நிகழ்ச்சி ஏற்பாட்டாளர்கள் நிகழ்ச்சியின் நேரடி ஒளிபரப்பை திடீரென நிறுத்தினர்.
அதே வேளையில் ஊடகவியலாளர்களும் அரங்கத்திலிருந்து வெளியேற்றப்பட்டனர்.
ஒரு குறிப்பிட்ட தனிநபரைக் குறிவைப்பதாகத் தான் கருதிய ஒரு கூற்றுக்கு எதிர்ப்பு தெரிவித்து, ஹசன் ரமணனின் பேச்சை இடைமறித்தபோது இந்தச் சம்பவம் நிகழ்ந்தது.
இது ஒரு மாநாடு, தனிநபர்களைத் தாக்குவதற்கான இடமல்ல என்று, பிரதிநிதிகள் பார்த்துக் கொண்டிருக்க, எரிச்சலுடன் ஹசான் கூறினார்.
முன்னதாக உட்கட்சி விமர்சகர்களைக் கடுமையாகச் சாடி, கெஅடிலான் மீது தாக்குதல் நடத்தப்படுவதாகக் கூறியிருந்த டத்தோஸ்ரீ ரமணன்,
கட்சி மீதான விசுவாசமே முதன்மையானது என்று வலியுறுத்தித் தனது நிலைப்பாட்டில் உறுதியாக இருந்தார்.
- பார்த்திபன் நாகராஜன்
தொடர்புடைய செய்திகள்
April 7, 2026, 4:17 pm
அசாம் பாக்கி உரையில் பரபரப்பு: பதாகைகளுடன் மேடையை நோக்கிப் பாய்ந்த இளைஞர்கள்
April 7, 2026, 3:53 pm
ஐந்து வாகன விபத்தில் இருவர் காயமடைந்தனர்
April 7, 2026, 3:31 pm
காதலியின் மகளைச் சீரழித்த சமையல்காரர்
April 7, 2026, 3:23 pm
உலகளாவிய எரிசக்தி நெருக்கடி குறித்து மக்களுக்கு விளக்கமளிக்க வேண்டும்: அந்தோனி லோக்
April 7, 2026, 3:05 pm
லஞ்சப் புகாரில் 4 போலிசார் கைது
April 7, 2026, 2:51 pm
மௌனம் என்பது அநீதிக்குத் துணை போவதே: ஈரான் தூதரகத்தின் அதிரடி அறிக்கை
April 7, 2026, 1:14 pm
செகாமட் விபத்து: 3 பேரைக் கொன்ற லாரி ஓட்டுநர் மீது கொலை வழக்கு
April 7, 2026, 12:59 pm
கே.பி.டி.என். கிளாந்தான் இயக்குநர் காலமானார்
April 7, 2026, 12:31 pm
