செய்திகள் மலேசியா
பொருளாதாரத் தாக்கம்; அமெரிக்கத் தூதரகத்திடம் இழப்பீடு கோருவதற்கு மலேசியாவிற்கு உரிமை உண்டு: டாக்டர் சத்தியபிரகாஷ்
கோலாலம்பூர்:
பொருளாதாரத் தாக்கத்தால் அமெரிக்கத் தூதரகத்திடம் இழப்பீடு கோருவதற்கு மலேசியாவிற்கு உரிமை உண்டு.
மேற்கு ஆசியாவில் வல்லரசால் தூண்டப்பட்ட போர் மோதல்களைத் தொடர்ந்து, மலேசியா உட்பட பாதிக்கப்பட்ட நாடுகளுக்கு அமெரிக்க இழப்பீடு வழங்க வேண்டும்.
இந்தக் கோரிக்கையை அமெரிக்கத் தூதரகம் மூலம் சமர்ப்பிக்க வேண்டும் என்று சிலாங்கூர் மாநில தேர்தல் இயக்குநர் டாக்டர் சத்யபிரகாஷ் நடராஜன் கூறினார்.
போர், பொருளாதாரத் தடைகளின் விளைவுகள், நேரடியாக சம்பந்தப்பட்ட நாடுகளைப் பாதிப்பது மட்டுமல்லாமல், வளரும் நாடுகளையும் அவை தாங்கிக்கொள்ளத் தேவையில்லாத ஒரு பொருளாதார நிலையற்ற தன்மைக்குள் இழுத்துச் செல்கின்றன.
எனவே, பிற நாடுகள் சந்தித்த பொருளாதார பாதிப்புகளுக்கு அவர்கள் பொறுப்பேற்க வேண்டும் என்றும், இழப்பீடு வழங்குவது குறித்து பரிசீலிக்க வேண்டும்.
அமெரிக்கத் தூதரகம் மூலம் கோருவதற்கு எங்களுக்கு உரிமை உள்ளது என்று அவர் ஒரு அறிக்கையில் தெரிவித்தார்.
- பார்த்திபன் நாகராஜன்
தொடர்புடைய செய்திகள்
April 7, 2026, 4:17 pm
அசாம் பாக்கி உரையில் பரபரப்பு: பதாகைகளுடன் மேடையை நோக்கிப் பாய்ந்த இளைஞர்கள்
April 7, 2026, 3:53 pm
ஐந்து வாகன விபத்தில் இருவர் காயமடைந்தனர்
April 7, 2026, 3:31 pm
காதலியின் மகளைச் சீரழித்த சமையல்காரர்
April 7, 2026, 3:23 pm
உலகளாவிய எரிசக்தி நெருக்கடி குறித்து மக்களுக்கு விளக்கமளிக்க வேண்டும்: அந்தோனி லோக்
April 7, 2026, 3:05 pm
லஞ்சப் புகாரில் 4 போலிசார் கைது
April 7, 2026, 2:51 pm
மௌனம் என்பது அநீதிக்குத் துணை போவதே: ஈரான் தூதரகத்தின் அதிரடி அறிக்கை
April 7, 2026, 1:14 pm
செகாமட் விபத்து: 3 பேரைக் கொன்ற லாரி ஓட்டுநர் மீது கொலை வழக்கு
April 7, 2026, 12:59 pm
கே.பி.டி.என். கிளாந்தான் இயக்குநர் காலமானார்
April 7, 2026, 12:31 pm
