செய்திகள் வணிகம்
பகிர்ந்து உண்போம். மகிழ்ந்து கொண்டாடுவோம்: மெக்டொனால்ட்ஸ் மலேசியாவின் நாடு தழுவிய பெருநாள் பயணம்
பாங்கி:
இந்த ஆண்டு ஐதில்ஃபித்ரி கொண்டாட்டத்தை முன்னிட்டு, மெக்டோனால்ட்ஸ் மலேசியா நாடு முழுவதும் தேர்ந்தெடுக்கப்பட்ட இடங்களில் வெள்ளியன்று தொடங்கிய சமூக கொண்டாட்ட சுற்றுப்பயண தொடர் மூலம் தனது சமூக உறுதிப்பாட்டை தொடர்கிறது.
இந்த முன்முயற்சி கடந்த ரமலான் மாதம் மேற்கொண்ட நலன்புரி முயற்சிகளின் தொடர்ச்சியாகும். உள்ளூர் சமூகங்களை ஆதரிக்கவும் மலேசியர்களுக்கு இனிய நினைவுகளை உருவாக்கவும் இந்த உணவு சங்கிலி நிறுவனத்தின் அர்ப்பணிப்பை இது பிரதிபலிக்கிறது.
ரமலான் மாதம் முழுவதும் மெக்டோனால்ட்ஸ் மலேசியா நாடு முழுவதும் 300 பள்ளிவாசல்கள், சுரவ்களுக்கு மோரே உணவு வழங்குவது, அருகிலுள்ள ஆதரவற்ற குழந்தைகளுடன் நோன்பு திறப்பு விருந்து ஏற்பாடு செய்வது, ரோனால்ட் மெக்டோனால்ட் இல்லத்தில் உள்ள குடும்பங்கள், குழந்தைகளுக்கு ரமலான் அன்பளிப்புகள் விநியோகிப்பது உட்பட பல திட்டங்களை செயல்படுத்தியது.
மேலும், ரோனால்ட் மெக்டோனால்ட் இல்லக் குழந்தைகளின் ஓவியங்களைச் சிறப்பிக்கும் சிறப்பு ராயா பண உறைகளையும் அறிமுகப்படுத்தியது. இது அவர்களின் படைப்பாற்றலையும் மகிழ்ச்சியையும் எடுத்துக்காட்டியது.
மெக்டோனால்ட்ஸ் மலேசியாவின் மேலாண்மை இயக்குநரும் உள்ளூர் நடவடிக்கை பங்காளருமான டத்தோ அஸ்மிர் ஜாஃபர் அறிக்கையில், கொண்டாட்டம் வெறும் பண்டிகையைக் கொண்டாடுவதற்காக மட்டுமல்ல, மாறாக சமூகத்தில் ஒற்றுமை, பரஸ்பர ஆதரவின் உணர்வையும் பிரதிபலிப்பதாகும் என்று கூறினார்.
"நீண்ட காலமாக, ரமலானிலிருந்து ஷவ்வால் வரை சமூகத்திற்குச் சேவை செய்வது மெக்டோனால்ட்ஸின் பாரம்பரியத்தின் ஒரு பகுதியாக மாறியுள்ளது.
"ஹரிராயா என்பது நம்மிடையே மிகவும் அர்த்தமுள்ள உறவுகளை போற்றும் நேரம்.
"இந்தக் கொண்டாட்ட நிகழ்ச்சி மூலம், நாம் சேவிக்கும் சமூகத்திற்கு சகோதரத்துவத்தின் உணர்வை நீட்டிக்கவும், உண்மையான ராயாவின் பொருளைப் பிரதிபலிக்கும் ஒன்றாக இருக்கும் தருணங்களை உருவாக்கவும் நம்புகிறோம்" என்று அவர் கூறினார்.
ஷவ்வால் கொண்டாட்டம் வெள்ளியன்று இங்கு பண்டார் பாரு பாங்கியில் உள்ள மெக்டோனால்ட்ஸ் டிரைவ்-த்ரூ உணவகத்தில் தொடங்கியது. அஸ்மிர் கலந்துகொண்ட இந்த நிகழ்வு நாடு முழுவதும் தேர்ந்தெடுக்கப்பட்ட இடங்களில் தொடர்ந்து நடைபெறும்.
மகிழ்ச்சியான ராயா சூழலை உருவாக்க உணவகங்களும் அலங்கரிக்கப்பட்டன.
விருந்தினர்களுக்கு கொம்பாங் இசை, பாரம்பரிய ஜோகெட் நடனம், நேரடி பொழுதுபோக்கு, மெக்டோனால்ட்ஸ் மாஸ்கட்டுடன் ஊடாடும் விளையாட்டுகளும் வழங்கப்பட்டன.
சமூகத்திற்கு நன்றி தெரிவிக்கும் வகையில், ஒவ்வொரு இடத்திலும் 1,000 இலவச சிக்கன் ஃபோல்டோவர் உணவுகளுடன் ஆப்பிள் ப , தே ஃப்யூஸ் பானமும் மெக்டோனால்ட்ஸ் மலேசியா விநியோகித்தது.
இந்த ஷவ்வால் கொண்டாட்டத் திட்டம், மெக்டொனால்ட்ஸ் மலேசியா தான் செயல்படும் பகுதிகளில் உள்ள சமூகங்களுக்கு ஆதரவளிப்பதில் கொண்டுள்ள தொடர்ச்சியான அர்ப்பணிப்பைப் பிரதிபலிக்கிறது. அத்துடன், சீனப் புத்தாண்டு, காவாய் தினம், காமத்தான், தீபாவளி உள்ளிட்ட ஒவ்வொரு பண்டிகைக் காலத்தையும், உள்ளூர் கலாச்சாரப் பன்முகத்தன்மையைக் கொண்டாடுவதற்கும், சமூகத்திற்குத் திருப்பிக் கொடுப்பதற்குமான ஒரு வாய்ப்பாக இது அமைகிறது.
பண்டிகைக் காலங்களுக்கு வெளியே, மெக்டொனால்ட்ஸ் மலேசியா, சமூகத்தைச் சென்றடைவதற்கான தனது தொடர்ச்சியான முயற்சிகளின் ஒரு பகுதியாக, நாடு முழுவதும் உள்ள 370-க்கும் மேற்பட்ட உணவகங்களில், நல்வாழ்வு இல்லங்கள், பள்ளிகள், பல்வேறு சமூக நடவடிக்கைகள் உள்ளிட்ட 10,000-க்கும் மேற்பட்ட சமூக முன்னெடுப்புகளை ஆண்டுதோறும் செயல்படுத்துகிறது.
மலேசிய மக்களிடையே பாலஸ்தீன போருக்குப் பிறகு மெக்டொனல்ட்ஸ் உணவுகளை புறக்கணிக்கும் பண்பு மேலோங்கியதால் அதன் வர்த்தகம் பெருமளவில் பாதித்தது என்பது குறிப்பிடத்தக்கது.
-சங்கீர்த்தனா
தொடர்புடைய செய்திகள்
September 6, 2026, 5:39 pm
சிங்கப்பூரில் curry puff வாங்க சீனாவிலிருந்து வந்த விநியோக ஊழியர்
September 2, 2026, 4:36 pm
இந்தியாவின் முன்னணி பெருங்காய நிறுவனங்களான எல்ஜி, எவரெஸ்ட் நிறுவனப் பெருங்காயங்கள் விற்பனைக்கு தடை
August 31, 2026, 8:14 pm
சிங்கப்பூரில் உத்தரவாதமில்லாக் கடன் பெறுவோர் - மறுபரிசீலனை செய்ய 3 நாள் அவகாசம்
August 30, 2026, 9:46 pm
கே8 சரக்குகளைக் கையாள்வது குறித்து அரசும், ஏஜென்சிகளும் தெளிவுபடுத்த வேண்டும்
August 26, 2026, 11:58 am
சிங்கப்பூர் ஏர்லைன்சிடம் US$1.5 பில்லியன் கோரும் ஏர் இந்தியா
August 26, 2026, 10:03 am
கோவில்பட்டி கடலைமிட்டாய் விலையை 25 சதவீதம் உயர்த்த முடிவு
August 23, 2026, 11:18 am
மறுபயனீட்டுக்காக சிங்கப்பூரிலிருந்து மலேசியாவுக்கு அனுப்பப்படும் துணிகள்
August 17, 2026, 3:15 pm
