செய்திகள் வணிகம்
அமெரிக்க டாலருக்கு எதிரான வர்த்தகத்தில் ரிங்கிட்டின் மதிப்பு தொடர்ந்து முன்னேற்றம்
செய்தி 3
கோலாலம்பூர்:
NFP (விவசாயம் அல்லாத தொழில் வேலையாட்கள்) எண்ணிக்கை குறைவாக இருக்கும் என்ற எதிர்பார்ப்பில் சந்தை தயாராகும் நிலையில் வெள்ளியன்று ஆரம்ப வர்த்தகத்தில் ரிங்கிட் அமெரிக்க டாலருக்கு எதிராக வலுப்பெற்றது. இது அமெரிக்க டாலரில் அழுத்தத்தை ஏற்படுத்தி பிராந்திய நாணயங்களை ஆதரித்துள்ளது.
வியாழக்கிழமை 4.0365/0430 ஆக சந்தை மூடியதிலிருந்து உள்ளூர் நாணயம் இன்று காலை 11 மணிக்கு, அமெரிக்க டாலருக்கு எதிராக 4.0180/0380 ஆக உயர்ந்தது.
IPPFA Sdn Bhd-இன் முதலீட்டு வியூகத்தின் இயக்குநரும் பொருளியலாளருமான முஹம்மத் செடெக் ஜாந்தான், என்ஃப்பி தரவு குறித்த எதிர்பார்ப்புகள் டாலரில் அழுத்தம் ஏற்படுத்தக்கூடிய குறைவான வாசிப்பை நோக்கி சாய்கின்றன என்று கூறினார்.
"இது ஆசிய நாணயங்களை ஆதரிக்கும் மறுசீரமைப்பைக் காட்டுகிறது.
"என்ஃப்பி தரவில் எந்த திடுக்கிட வைக்கும் தகவலும் ஃபெடரல் ரிசர்வ் எதிர்பார்ப்புகளில் மிதமான மறுசீரமைப்பைத் தூண்டும், டாலருக்கான வட்டி ஆதரவைக் குறைக்கும் என்று எதிர்பார்க்கப்படுவதால் ரிங்கிட் வலுப்படுவதற்கு இடம் உருவாகிறது" என்று அவர் பெர்னாமாவிடம் தெரிவித்தார்.
எனினும், குறுகியகால போக்கு ரிங்கிட் வலுப்பெறுவதை ஆதரித்தாலும், அமெரிக்கா-ஈரான் இடையே தொடரும் பதற்றங்கள் டாலர் பணப்புழக்கத்திற்கான பாதுகாப்பான சொத்துக்களுக்கான தேவையைத் தொடர்ந்து வலுப்படுத்துவதால், பேரியல் சூழல் டாலருக்குச் சாதகமாகவே உள்ளது என்று அவர் கூறினார்.
இதற்கிடையே, உள்ளூர் நாணயம் முக்கிய நாணயங்களுக்கு எதிராக உயர்வுடன் காணப்பட்டது. வியாழக்கிழமை மாலை முடிவடைந்த வர்த்தக சந்தையிலிருந்து பிரிட்டிஷ் பவுண்டுக்கு எதிராக 5.3278/3364-லிருந்து 5.3158/3423 ஆகவும், ஜப்பானிய யென்னுக்கு எதிராக 2.5295/5337-லிருந்து 2.5191/5318 ஆகவும், யூரோவிற்கு எதிராக 4.6517/6592-லிருந்து 4.6372/6603 ஆகவும் வலுப்பெற்றது.
ஆசியான் நாணயங்களுக்கு எதிராகவும் உள்ளூர் நாணயம் உயர்வாக வர்த்தகமானது. வியாழக்கிழமை நிலையிலிருந்து சிங்கப்பூர் டாலருக்கு எதிராக 3.1364/1417-லிருந்து 3.1254/1422 ஆகவும், பிலிப்பைன்ஸ் பேசோவிற்கு எதிராக 6.66/6.68-லிருந்து 6.63/6.67 ஆகவும் உயர்ந்தது. இந்தோனேசியா ருபியாவிற்கு எதிராக 237.4/237.9-லிருந்து 236.3/237.6 ஆகவும், தாய்லாந்து பாட்டிற்கு எதிராக 12.3180/3447-லிருந்து 12.3161/3930 ஆகவும் உயர்ந்தது.
தொடர்ந்து, இந்திய ரூபாய் ஒரு ரிங்கிட்டிற்கு 22.98 காசாக விற்பனை செய்யப்படுகிறது. டாலருக்கு எதிராக இந்திய ரூபாய் 92.78 காசுக்கு விற்பனை செய்யப்படுகிறது.
-சங்கீர்த்தனா
தொடர்புடைய செய்திகள்
October 5, 2026, 10:07 pm
டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு தொடர்ந்து சரிவு
October 5, 2026, 3:40 pm
சீரகத் தூளில் பூச்சிக்கொல்லி மருந்து: உடனடியாக அகற்ற இந்திய அரசு உத்தரவு
September 26, 2026, 12:30 pm
வட அமெரிக்காவில் மேலும் 250 கடைகளை மூடும் Starbucks
September 11, 2026, 4:22 pm
ஃபேன்சி அகாடாமி அணிச்சல், பேக்கரி துறையில் திறமையான சாதனையாளர்களை உருவாக்கும்: விக்னேஸ்வரி நம்பிக்கை
September 11, 2026, 3:07 pm
இந்தியாவில் iPhone விலை 41% வரை அதிகரிப்பு
September 6, 2026, 5:39 pm
சிங்கப்பூரில் curry puff வாங்க சீனாவிலிருந்து வந்த விநியோக ஊழியர்
September 2, 2026, 4:36 pm
இந்தியாவின் முன்னணி பெருங்காய நிறுவனங்களான எல்ஜி, எவரெஸ்ட் நிறுவனப் பெருங்காயங்கள் விற்பனைக்கு தடை
August 31, 2026, 8:14 pm
சிங்கப்பூரில் உத்தரவாதமில்லாக் கடன் பெறுவோர் - மறுபரிசீலனை செய்ய 3 நாள் அவகாசம்
August 30, 2026, 9:46 pm
கே8 சரக்குகளைக் கையாள்வது குறித்து அரசும், ஏஜென்சிகளும் தெளிவுபடுத்த வேண்டும்
August 26, 2026, 11:58 am
