செய்திகள் வணிகம்
சீனா-மலேசியா AS$72 மில்லியன் மதிப்பிலான 26 ஒப்பந்தங்கள் கையெழுத்திட்டன
இன் சுவான்:
சீனாவும் மலேசியாவும் 72 மில்லியன் அமெரிக்க டாலர் மதிப்புள்ள 26 ஒப்பந்தங்களில் கையெழுத்திட்டன. வடமேற்கு சீனாவின் நிங்சியா ஹுய் தன்னாட்சிப் பகுதியின் தலைநகரான இன்சுவானில் வியாழக்கிழமை தொடங்கிய சீனா-மலேசியா ஆறாவது வர்த்தகப் பேச்சுவார்த்தையின் போது, மொத்தம் 495 மில்லியன் யுவான் (சுமார் 72 மில்லியன் அமெரிக்க டாலர்) மதிப்புள்ள 26 ஒத்துழைப்புத் திட்டங்கள் கையெழுத்தாயின என்று சின்ஹுவா செய்தி வெளியிட்டுள்ளது.
பொருளாதார முதலீடு , வர்த்தகம், நவீன விவசாயம் போன்ற துறைகளை உள்ளடக்கிய இந்த ஒப்பந்தங்கள் இருதரப்பு பொருளாதார உறவுகளில் குறிப்பிடத்தக்க விரிவாக்கத்தைப் பிரதிபலிக்கின்றன.
இந்த நிகழ்வு இரண்டு நாடுகளிலிருந்தும் 200-க்கும் மேற்பட்ட அரசாங்க , வணிக பிரதிநிதிகளை ஈர்த்தது. பெல்ட் அண்ட் ரோட் முன்முயற்சியின் (BRI) கீழ் கூட்டுறவை ஆழப்படுத்தும் முயற்சிகளை, குறிப்பாக பொருளாதாரம், வர்த்தகம், அறிவியல், தொழில்நுட்பம், விவசாயம், கலாச்சாரம், சுற்றுலாத்துறை ஆகியவற்றில் கவனம் செலுத்தி விவாதிக்கப்பட்டது.
சீனா பல ஆண்டுகளாக தொடர்ந்து மலேசியாவின் மிகப்பெரிய வர்த்தக பங்காளியாக இருந்துவருகிறது குறிப்பிடத்தக்கது. சமீபத்தில் இந்தக் கூட்டாண்மை நிலையான பொருட்கள் பரிமாற்றத்திலிருந்து மிகவும் ஆழமான தொழிற்துறை ஒத்திசைவு, ஒருங்கிணைந்த விநியோக சங்கிலிகளுக்கு விரிவடைந்துள்ளது.
சீன கம்யூனிஸ்ட் கட்சியின் மத்தியக் குழுவின் சர்வதேசத் துறையின் துணைத் தலைவர் மா ஹுய், தனது தொடக்க உரையில், இந்த உரையாடலை சீன, மலேசியத் தரப்பினருக்கு இடையேயான கருத்துப் பரிமாற்றங்களுக்கும், நடைமுறைப் பொருளாதார ஒத்துழைப்பை மேம்படுத்துவதற்கும் ஒரு முக்கியமான தளமாக விவரித்தார்.
இரு நாடுகளுக்கிடையேயான நல்லுறவுகளை மேலும் வலுப்படுத்த தற்போதைய வாய்ப்புகளை இரண்டு தரப்பும் பயன்படுத்திக்கொள்ளுமாறும் அவர் வலியுறுத்தினார்.
மலேசியா அறிவியல், தொழில்நுட்பம், புத்தாக்கத் துறை அமைச்சர் சாங் லிஹ் காங், இந்த உரையாடல் உலகளாவிய பொருளாதார நிச்சயமற்ற தன்மைக்கு மத்தியில் முக்கியமான நிலைத்தன்மையை வழங்குவதாக கூறினார். எரிசக்தி மாற்றமும் செயற்கை நுண்ணறிவில் (AI) கூட்டு முயற்சிகளின் சாத்தியத்தையும் வலியுறுத்தி, மலேசியாவின் AI கல்வி நிறுவனங்கள் சீன நிபுணத்துவத்திலிருந்து பெரிதும் பயன்பெற்றதாகவும் அவர் தெரிவித்தார்.
இந்த உரையாடல் தாயக பகுதியில் திறந்த பொருளாதார சோதனை மண்டலமாக நிங்சியாவின் வளர்ந்துவரும் சர்வதேச பங்கையும் எடுத்துக்காட்டியது. மலேசியா தற்போது அப்பகுதியின் மிகப்பெரிய வேளாண் பொருட்கள் ஏற்றுமதி சந்தையாக உள்ளதையும் அவர் சுட்டிக்காட்டினார்.
மேலும், 2025-ல் நிங்சியாவிற்கு வருகை புரிந்த மலேசிய சுற்றுலாப் பயணிகளின் எண்ணிக்கை முந்தைய ஆண்டை விட 207.7 சதவீதம் உயர்ந்தது, மலேசியாவை அந்த பகுதிக்கான முன்னணி சர்வதேச பார்வையாளர்களின் மூலமாக மாற்றியது.
இந்த நிகழ்வை சீன பொருளாதார ஒத்துழைப்பு மையம், மலேசியா-சீனா வணிக சபை, நிங்சியா வெளியுறவு துறை ஆகியவை கூட்டாக ஏற்பாடு செய்தன.
-சங்கீர்த்தனா
தொடர்புடைய செய்திகள்
April 21, 2026, 4:08 pm
குழந்தைகள் உணவில் எலி விஷம்: விற்ற பொருள்களைத் திரும்பப் பெறும் தனியார் நிறுவனம்
April 21, 2026, 12:41 pm
அமெரிக்கா-ஈரான் பேச்சுவார்த்தை: முக்கிய உலக நாணயங்களுக்கு எதிராக ரிங்கிட் ஏற்றம்
April 15, 2026, 11:49 am
அமெரிக்கா - ஈரான் பேச்சுவார்த்தை: பலம் பெறும் மலேசிய ரிங்கிட்
April 15, 2026, 11:10 am
தாய்லாந்தின் சொங்க்ரான் திருவிழா: 3000 கோடி பாட் வருமானம் ஈட்டி மெகா சாதனை
April 13, 2026, 4:47 pm
அமெரிக்கா - ஈரான் அமைதிப் பேச்சுவார்த்தை தோல்வி எதிரொலி: இந்திய பங்குச் சந்தை கடும் வீழ்ச்சி
April 9, 2026, 5:23 pm
மெய்நிகர் சொத்துக்களைப் பயன்படுத்தி பணமோசடி செய்யும் அபாயம் அதிகரிக்கிறது
April 9, 2026, 10:35 am
