செய்திகள் வணிகம்
மத்திய கிழக்கு போர் எதிரொலி: ஐக்கிய அரபு அமீரகப் பங்குச்சந்தைகளில் முதலீடுகள் வீழ்ந்தன
துபாய்:
ஈரான், பிராந்திய நாடுகளுக்கு இடையே நிலவும் போர் பதற்றத்தின் காரணமாக, ஐக்கிய அரபு அமீரகத்தின் முக்கியப் பங்குச்சந்தைகளான துபாய், அபுதாபி சந்தைகள் வரலாறு காணாத சரிவைச் சந்தித்துள்ளன.
கடந்த சில தினங்களாக நீடித்து வரும் இந்த அரசியல் உறுதியற்ற தன்மையால், முதலீட்டாளர்கள் மத்தியில் பெரும் அச்சம் ஏற்பட்டுள்ளது. இதன் விளைவாக, இரண்டு சந்தைகளிலும் சேர்த்து சுமார் 120 பில்லியன் அமெரிக்க டாலர் மதிப்பிலான சந்தை மூலதனம் வீழ்ச்சியடைந்துள்ளது.
குறிப்பாக, அபுதாபி பங்குச்சந்தையின் பொதுக் குறியீடு சுமார் 4.5% வரை சரிந்துள்ளதோடு, அங்குள்ள எரிசக்தி, வங்கித் துறையைச் சார்ந்த பங்குகளின் விலை மிகக் கடுமையாகப் பாதிப்புக்குள்ளாகியுள்ளது.
அதேபோல், துபாய் நிதிச் சந்தையிலும் குறியீடு சுமார் 3.8% வரை சரிவைக் கண்டுள்ளது. போர் மூளும் அபாயம், வான்வழிப் போக்குவரத்துத் தடைகள் குறித்த செய்திகளால், சர்வதேச முதலீட்டாளர்கள் தங்களது பங்குகளை அவசர அவசரமாகத் திரும்பப் பெற்று வருவதால் வர்த்தக நடவடிக்கைகள் கணிசமாகக் குறைந்துள்ளன.
வளைகுடா பிராந்தியத்தில் நிலவும் இந்த போர்ச் சூழல், கச்சா எண்ணெய் விலையில் பெரும் மாற்றங்களை ஏற்படுத்தியுள்ளதோடு, ஒட்டுமொத்தப் பொருளாதார நிலைத்தன்மையையும் கேள்விக்குறியாக்கியுள்ளது.
ஈரான் மீதான பொருளாதாரத் தடைகள், தாக்குதல் அச்சுறுத்தல்கள் தொடரும் பட்சத்தில், பங்குச்சந்தையின் வீழ்ச்சி மேலும் அதிகரிக்கக்கூடும் எனப் பொருளாதார நிபுணர்கள் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.
தற்போது நிலவும் இந்த இக்கட்டான சூழலைச் சமாளிக்க, ஐக்கிய அரபு அமீரகத்தின் நிதி நிறுவனங்கள், சந்தை ஒழுங்குமுறை ஆணையங்கள் தீவிரக் கண்காணிப்பில் ஈடுபட்டுள்ளன.
முதலீட்டாளர்களின் நம்பிக்கையை மீட்டெடுக்கவும், சந்தையின் சரிவைத் தடுக்கவும் தேவையான மாற்று நடவடிக்கைகளை மேற்கொள்வது குறித்து அதிகாரிகள் ஆலோசித்து வருகின்றனர். இருப்பினும், போர் பதற்றம் தணிந்தால் மட்டுமே சந்தை மீண்டும் பழைய நிலைக்குத் திரும்பும் என எதிர்பார்க்கப்படுகிறது.
-கிரித்திக்கா
தொடர்புடைய செய்திகள்
October 5, 2026, 10:07 pm
டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு தொடர்ந்து சரிவு
October 5, 2026, 3:40 pm
சீரகத் தூளில் பூச்சிக்கொல்லி மருந்து: உடனடியாக அகற்ற இந்திய அரசு உத்தரவு
September 26, 2026, 12:30 pm
வட அமெரிக்காவில் மேலும் 250 கடைகளை மூடும் Starbucks
September 11, 2026, 4:22 pm
ஃபேன்சி அகாடாமி அணிச்சல், பேக்கரி துறையில் திறமையான சாதனையாளர்களை உருவாக்கும்: விக்னேஸ்வரி நம்பிக்கை
September 11, 2026, 3:07 pm
இந்தியாவில் iPhone விலை 41% வரை அதிகரிப்பு
September 6, 2026, 5:39 pm
சிங்கப்பூரில் curry puff வாங்க சீனாவிலிருந்து வந்த விநியோக ஊழியர்
September 2, 2026, 4:36 pm
இந்தியாவின் முன்னணி பெருங்காய நிறுவனங்களான எல்ஜி, எவரெஸ்ட் நிறுவனப் பெருங்காயங்கள் விற்பனைக்கு தடை
August 31, 2026, 8:14 pm
சிங்கப்பூரில் உத்தரவாதமில்லாக் கடன் பெறுவோர் - மறுபரிசீலனை செய்ய 3 நாள் அவகாசம்
August 30, 2026, 9:46 pm
கே8 சரக்குகளைக் கையாள்வது குறித்து அரசும், ஏஜென்சிகளும் தெளிவுபடுத்த வேண்டும்
August 26, 2026, 11:58 am
