செய்திகள் இந்தியா
சட்டவிரோத சிறுநீரக விற்பனை கும்பல் பிடிபட்டது: 5 மருத்துவர்கள் உட்பட 6 பேர் கைது
கான்பூர்:
இந்தியாவின் கான்பூர் நகரில் பல கோடி ரூபாய் மதிப்பிலான சட்டவிரோத சிறுநீரக விற்பனை கும்பலைச் சேர்ந்த ஐந்து மருத்துவர்கள் உட்பட ஆறு பேரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். சிறுநீரக விற்பனைக்காகப் பேசப்பட்ட தொகையில் 50,000 ரூபாய் குறைவாக வழங்கப்பட்டதால் ஏற்பட்ட தகராறு, இறுதியில் இந்த மாபெரும் சர்வதேச கடத்தல் கும்பலை வெளிச்சத்திற்குக் கொண்டு வந்துள்ளது.
சமஸ்திபூரைச் சேர்ந்த ஆயுஷ் என்ற மருத்துவ மாணவர், தனது சிறுநீரகத்தை 10 லட்சம் ரூபாய்க்கு விற்க உடன்பட்டுள்ளார். ஆனால், அவருக்கு 9.5 லட்சம் ரூபாய் மட்டுமே வழங்கப்பட்டதால் ஆத்திரமடைந்து அவர் அளித்த புகாரே இந்த அதிரடி நடவடிக்கைக்குக் காரணமாக அமைந்தது.
விசாரணையில், ஏழை இளைஞர்களிடமிருந்து 10 லட்சம் ரூபாய்க்கு சிறுநீரகத்தை வாங்கும் இந்த கும்பல், அதனைத் தேவையுள்ள நோயாளிகளிடம் 60 லட்சம் ரூபாய் வரை விற்று வந்ததும், டெலிகிராம் செயலி மூலம் நிதி நெருக்கடியில் உள்ள இளைஞர்களைக் குறிவைத்ததும் தெரியவந்துள்ளது.
கல்யாண்பூர் பகுதியில் உள்ள அஹுஜா, பிரியா, மெட் லைஃப் ஆகிய மூன்று மருத்துவமனைகளில் காவல்துறையினர் நடத்திய நள்ளிரவு சோதனையில், வெளிநாட்டினர் உட்பட குறைந்தது 40 பேருக்குச் சட்டவிரோத அறுவை சிகிச்சைகள் செய்யப்பட்டது கண்டறியப்பட்டது. இதில் 'மெட் லைஃப்' மருத்துவமனை எவ்வித அங்கீகாரமுமின்றி இயங்கி வந்ததும் அம்பலமானது.
தற்போது உயிருக்கு ஆபத்தான நிலையில் மீட்கப்பட்ட புகார்தாரர் ஆயுஷ், மேலதிக சிகிச்சைக்காக அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். இச்சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ள நிலையில், இந்த சட்டவிரோத வலைப்பின்னலில் தொடர்புடைய மற்ற நபர்களைப் பிடிப்பதற்கான தேடுதல் வேட்டையை காவல்துறையினர் தீவிரப்படுத்தியுள்ளனர்.
-கிரித்திக்கா
தொடர்புடைய செய்திகள்
August 24, 2026, 4:35 pm
கொல்கத்தாவில் ஷோரூமில் பயங்கர தீ விபத்து: 22 புதிய கார்கள் எரிந்து நாசம்
August 22, 2026, 6:05 pm
மராத்தி மொழி தெரியாத 1,268 ஆட்டோ - டாக்சி ஓட்டுநர்களுக்கு எதிராக மகாராஷ்டிர அரசு நடவடிக்கை
August 21, 2026, 9:37 pm
மோசடித் தளங்களை நீக்கும்படி Googleக்கு இந்திய அரசு உத்தரவு
August 21, 2026, 10:14 am
சா்க்கரை இருப்பு வைக்கக்கூடாது: இந்திய அரசு அறிவிப்பு
August 20, 2026, 9:09 pm
சீன ஆக்கிரமிப்பு பற்றி ஒன்றிய அரசு விளக்கம் அளிக்காதது ஏன்?: காங்கிரஸ் தலைவர் கார்கே கேள்வி
August 19, 2026, 6:45 pm
அரசுப் பள்ளி உணவில் உப்புக்கு பதில் டிடர்ஜென்ட் பவுடர் கலந்ததால் 34 மாணவ, மாணவிகள் பாதிப்பு
August 18, 2026, 1:14 pm
பாஜக தேசிய மகளிா் அணி தலைவா் பதவியில் இருந்து வானதி சீனிவாசன் நீக்கம்
August 17, 2026, 4:43 pm
பிரதமர் மோடிக்காக 1,100 ராகிகளைத் தயாரித்த பிருந்தாவன் விதவைகள்
August 15, 2026, 1:12 pm
முன் அறிவிப்பின்றி விமானம் ரத்து: பெண் பயணி செய்த ரகளை இணையத்தில் வைரல்
August 15, 2026, 11:53 am
