செய்திகள் இந்தியா
ஆக்ராவில் பரபரப்பு: 15 வயது சிறுமி கூட்டுப் பாலியல் வன்கொடுமை
ஆக்ரா:
உத்தரப் பிரதேச மாநிலம் ஆக்ரா அருகே உள்ள கிராமம் ஒன்றில், 15 வயது சிறுமி ஒருவரை மூன்று பேர் கொண்ட கும்பல் கடத்திச் சென்று கூட்டுப் பாலியல் வன்கொடுமை செய்துள்ள அதிர்ச்சிச் சம்பவம் வெளிச்சத்திற்கு வந்துள்ளது.
தனது கிராமத்தில் நடைபெற்ற திருவிழாவைப் பார்த்துவிட்டுத் தனியாக வீடு திரும்பிக் கொண்டிருந்த அச் சிறுமியை, அதே பகுதியைச் சேர்ந்த மூன்று இளைஞர்கள் வழிமறித்துள்ளனர்.
"உன்னை வீட்டில் கொண்டு போய் விடுகிறோம்" என்று ஆசை வார்த்தை கூறி, அந்தச் சிறுமியைத் தங்களது மோட்டார் சைக்கிளில் ஏற்றியுள்ளனர். ஆனால், வீட்டிற்குச் செல்லாமல் ஆள் நடமாட்டம் இல்லாத மறைவான இடத்திற்குச் சிறுமியைக் கடத்திச் சென்ற அந்தக் காமுகர்கள், அங்கு வைத்து அவரைச் சீரழித்துள்ளனர்.
இச் சம்பவம் குறித்து யாரிடமாவது கூறினால் கொலை செய்துவிடுவதாகவும் அவர்கள் சிறுமியை மிரட்டியுள்ளனர்.
பாதிக்கப்பட்ட சிறுமி அழுதுகொண்டே வீடு திரும்பி, நடந்த கொடுமையை தனது பெற்றோரிடம் தெரிவித்துள்ளார்.
இதனைத் தொடர்ந்து, பெற்றோர்கள் அளித்த புகாரின் அடிப்படையில் காவல்துறையினர் உடனடியாக வழக்குப் பதிவு செய்து விசாரணையைத் தொடங்கினர். தீவிரத் தேடுதல் வேட்டைக்குப் பிறகு, தலைமறைவாக இருந்த மூன்று குற்றவாளிகளையும் காவல்துறையினர் அதிரடியாகக் கைது செய்தனர்.
பாதிக்கப்பட்ட சிறுமி தற்போது மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார். இச்சம்பவம் அந்தப் பகுதியில் பெரும் கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ள நிலையில், குற்றவாளிகளுக்குக் கடுமையான தண்டனை வழங்கப்பட வேண்டும் என்று சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். பெண்களின் பாதுகாப்பு குறித்து இச்சம்பவம் மீண்டும் ஒருமுறை பெரும் கேள்விக் குறியை எழுப்பியுள்ளது.
-கிரித்திக்கா
தொடர்புடைய செய்திகள்
October 5, 2026, 4:54 pm
கள்ளக் காதலியுடன் ஊர் சுற்றியபோது காரை இடைமறித்த மனைவியை பானெட்டில் இழுத்து சென்ற கணவர்
October 3, 2026, 3:44 pm
இந்திய விமானி ஸ்மித் மச்சாருக்கு, இஸ்ரேலிய சுற்றுலா பயணிகள் பதாகை ஏந்தி நன்றி தெரிவித்தனர்
October 1, 2026, 8:31 pm
டில்லியில் பெண்களுக்குப் பாதுகாப்பு கோரி மாணவர்கள் ஆர்ப்பாட்டம்
October 1, 2026, 5:55 pm
174 பேர் இருந்த விமானத்தைக் காப்பாற்ற உதவிய இந்திய விமானி
September 30, 2026, 10:34 am
டெல்லியில் இன்று நடைபெறும் ‘இண்டியா’ கூட்டணி கூட்டத்தை திமுக புறக்கணிக்கிறது: டி.கே.எஸ். இளங்கோவன் அறிவிப்பு
September 28, 2026, 1:47 pm
பெங்களூரு விமான நிலைய ஓடுபாதை தரையில் மோதிய இண்டிகோ விமானத்தின் வால் பகுதி
September 26, 2026, 9:26 pm
இந்தியத் தலைமைத் தேர்தல் ஆணையர் ஞானேஷ் குமார் பதவி விலகக் கோரி நாடு தழுவிய போராட்டம்
September 23, 2026, 3:13 pm
பிகாரில் கொட்டித்தீர்த்த கனமழை: 50 லட்சம் மக்கள் வெள்ளத்தால் பாதிப்பு
September 21, 2026, 10:20 pm
