செய்திகள் இந்தியா
விமான நிலையத்தில் நுழைந்த கரடி: கர்நாடக வனத்துறையினரின் அதிரடி நடவடிக்கை
சிவமொக்கா:
கர்நாடக மாநிலம் சிவமொக்கா மாவட்டத்தில் உள்ள சோகனே விமான நிலையத்திற்குள் கரடி ஒன்று புகுந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்த கரடியானது சுமார் 24 மணி நேரத்திற்குள் 50 கிலோமீட்டர் தூரம் நடைபயணம் மேற்கொண்டு விமான நிலையப் பகுதிக்குள் நுழைந்துள்ளதாக வனத்துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
விமான நிலையப் பாதுகாப்புப் பணியில் இருந்த ஊழியர்கள் கரடியைக் கண்டதும் உடனடியாக உயர் அதிகாரிகளுக்குத் தகவல் அளித்தனர்.
தகவலறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த வனத்துறையினர், கரடியைப் பிடிக்கும் பணியில் ஈடுபட்டனர். விமான நிலைய ஓடுபாதை, புதர்களுக்கிடையே மறைந்திருந்த அந்தக் கரடியை நீண்ட போராட்டத்திற்குப் பிறகு வனத்துறையினர் மயக்க ஊசி செலுத்திப் பிடித்தனர்.
பிடிபட்ட கரடி ஆரோக்கியமாக இருப்பதாகவும், அதற்கு எவ்விதக் காயங்களும் ஏற்படவில்லை என்றும் மருத்துவப் பரிசோதனையில் உறுதி செய்யப்பட்டுள்ளது.
வனத்துறை அதிகாரிகளின் கூற்றுப்படி, இந்தக் கரடி அடர்ந்த வனப்பகுதியிலிருந்து வழிதவறி மக்கள் நடமாட்டம் உள்ள பகுதிக்கு வந்துள்ளது. வெறும் ஒரே நாளில் 50 கிலோமீட்டர் தூரத்தைக் கடந்து வந்திருப்பது அதன் உடல் வலிமையைக் காட்டுகிறது. பிடிபட்ட கரடி தற்போது பாதுகாப்பாக லக்கவல்லி வனப்பகுதிக்குள் கொண்டு செல்லப்பட்டு மீண்டும் அதன் இயற்கைச் சூழலிலேயே விடுவிக்கப்பட்டது.
விமான நிலையத்திற்குள் வனவிலங்குகள் புகுவதைத் தவிர்க்க, வருங்காலங்களில் பாதுகாப்பு வேலிகளை இன்னும் பலப்படுத்தப் போவதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
இச் சம்பவத்தால் விமானப் போக்குவரத்து சேவையில் எவ்வித பாதிப்பும் ஏற்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
-கிரித்திக்கா
தொடர்புடைய செய்திகள்
October 5, 2026, 4:54 pm
கள்ளக் காதலியுடன் ஊர் சுற்றியபோது காரை இடைமறித்த மனைவியை பானெட்டில் இழுத்து சென்ற கணவர்
October 3, 2026, 3:44 pm
இந்திய விமானி ஸ்மித் மச்சாருக்கு, இஸ்ரேலிய சுற்றுலா பயணிகள் பதாகை ஏந்தி நன்றி தெரிவித்தனர்
October 1, 2026, 8:31 pm
டில்லியில் பெண்களுக்குப் பாதுகாப்பு கோரி மாணவர்கள் ஆர்ப்பாட்டம்
October 1, 2026, 5:55 pm
174 பேர் இருந்த விமானத்தைக் காப்பாற்ற உதவிய இந்திய விமானி
September 30, 2026, 10:34 am
டெல்லியில் இன்று நடைபெறும் ‘இண்டியா’ கூட்டணி கூட்டத்தை திமுக புறக்கணிக்கிறது: டி.கே.எஸ். இளங்கோவன் அறிவிப்பு
September 28, 2026, 1:47 pm
பெங்களூரு விமான நிலைய ஓடுபாதை தரையில் மோதிய இண்டிகோ விமானத்தின் வால் பகுதி
September 26, 2026, 9:26 pm
இந்தியத் தலைமைத் தேர்தல் ஆணையர் ஞானேஷ் குமார் பதவி விலகக் கோரி நாடு தழுவிய போராட்டம்
September 23, 2026, 3:13 pm
பிகாரில் கொட்டித்தீர்த்த கனமழை: 50 லட்சம் மக்கள் வெள்ளத்தால் பாதிப்பு
September 21, 2026, 10:20 pm
