செய்திகள் இந்தியா
மது அருந்தியபோது ஏற்பட்ட தகராறு: திருப்பதியில் பேருந்து ஓட்டுநர் கல்லால் அடித்துக் கொலை
விஜயவாடா:
ஆந்திர மாநிலம், திருப்பதி மத்திய பேருந்து நிலையத்தில் தனியார் பேருந்து ஓட்டுநர் ஒருவரை, அவருடன் பணிபுரிந்த கிளீனர் கல்லால் அடித்துக் கொன்ற சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. உயிரிழந்தவர் கர்நாடக மாநிலத்தைச் சேர்ந்த சங்கர் (45) என அடையாளம் காணப்பட்டுள்ளார். இவர் ஒரு தனியார் போக்குவரத்து நிறுவனத்தில் ஓட்டுநராகப் பணிபுரிந்து வந்தார்.
நேற்று நள்ளிரவு பேருந்து நிலைய வளாகத்தில் சங்கரும், கிளீனரான சுரேஷும் அமர்ந்து மது அருந்திக் கொண்டிருந்ததாகக் கூறப்படுகிறது. அப்போது இருவருக்கும் இடையே திடீரென வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது. ஆத்திரமடைந்த சுரேஷ், அங்கிருந்த பெரிய கல்லை எடுத்து சங்கரின் தலையில் பலமாகத் தாக்கியுள்ளார். இதில் பலத்த காயமடைந்த சங்கர் சம்பவ இடத்திலேயே ரத்த வெள்ளத்தில் உயிரிழந்தார்.
தகவலறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த திருப்பதி கிழக்கு காவல்துறையினர், சங்கரின் உடலைக் கைப்பற்றி பிரேதப் பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். தப்பியோட முயன்ற சுரேஷைக் காவல்துறையினர் அதிரடியாகக் கைது செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
பேருந்து நிலையத்தில் மக்கள் நடமாட்டம் அதிகம் உள்ள பகுதியில் இத்தகைய கொடூரச் சம்பவம் நடந்தது பயணிகளிடையே பெரும் அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது.
மதுப் போதையில் ஏற்பட்ட சிறு தகராறு கொலையில் முடிந்துள்ளதாக முதற்கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது. இச்சம்பவம் குறித்துத் தொடர்ந்து விசாரணை நடத்தி வரும் காவல்துறையினர், இது திட்டமிட்ட கொலையா அல்லது தற்செயலாக நடந்ததா என்ற கோணத்திலும் ஆய்வு செய்து வருகின்றனர்.
-கிரித்திக்கா
தொடர்புடைய செய்திகள்
October 5, 2026, 4:54 pm
கள்ளக் காதலியுடன் ஊர் சுற்றியபோது காரை இடைமறித்த மனைவியை பானெட்டில் இழுத்து சென்ற கணவர்
October 3, 2026, 3:44 pm
இந்திய விமானி ஸ்மித் மச்சாருக்கு, இஸ்ரேலிய சுற்றுலா பயணிகள் பதாகை ஏந்தி நன்றி தெரிவித்தனர்
October 1, 2026, 8:31 pm
டில்லியில் பெண்களுக்குப் பாதுகாப்பு கோரி மாணவர்கள் ஆர்ப்பாட்டம்
October 1, 2026, 5:55 pm
174 பேர் இருந்த விமானத்தைக் காப்பாற்ற உதவிய இந்திய விமானி
September 30, 2026, 10:34 am
டெல்லியில் இன்று நடைபெறும் ‘இண்டியா’ கூட்டணி கூட்டத்தை திமுக புறக்கணிக்கிறது: டி.கே.எஸ். இளங்கோவன் அறிவிப்பு
September 28, 2026, 1:47 pm
பெங்களூரு விமான நிலைய ஓடுபாதை தரையில் மோதிய இண்டிகோ விமானத்தின் வால் பகுதி
September 26, 2026, 9:26 pm
இந்தியத் தலைமைத் தேர்தல் ஆணையர் ஞானேஷ் குமார் பதவி விலகக் கோரி நாடு தழுவிய போராட்டம்
September 23, 2026, 3:13 pm
பிகாரில் கொட்டித்தீர்த்த கனமழை: 50 லட்சம் மக்கள் வெள்ளத்தால் பாதிப்பு
September 21, 2026, 10:20 pm
