செய்திகள் இந்தியா
உலகின் மிகப்பெரிய மக்கள்தொகை கணக்கெடுப்பை இந்தியா தொடங்கவுள்ளது
புது டெல்லி:
மூன்று மில்லியனுக்கும் மேற்பட்ட அதிகாரிகள் கலந்துகொள்ள இருக்கும் உலகின் மிகப்பெரிய மக்கள்தொகை கணக்கெடுப்பை இந்தியா புதன்கிழமை தொடங்கும்.
இந்த விரிவான கணக்கெடுப்பு நடவடிக்கை அடுத்த ஒரு வருட காலம் நடைபெறும்.
ஏறக்குறைய 1.4 பில்லியன் மக்கள் வாழும் இந்தத் தென் ஆசிய நாடு, வளர்ந்துவரும் மக்கள்தொகைக்கு மின்சாரம், உணவு, வீட்டுவசதி வழங்குவதில் பல அறைகூவல்களை எதிர்கொள்கிறது.
பரந்து விரிந்த பல மாபெரும் நகரங்கள் ஏற்கனவே நீர் பற்றாக்குறை, காற்று, நீர் மாசுபாடு, சேரி பகுதிகளால் அவதிப்படுகின்றன.
இந்திய அரசாங்கம் $1.24 பில்லியன் செலவிடும் இந்தக் கணக்கெடுப்பை "உள்ளடக்கிய ஆட்சி, ஆதாரம் அடிப்படையிலான கொள்கை வகுப்பை" ஆதரிக்கக்கூடிய "தேசிய முக்கியத்துவம் வாய்ந்த மகத்தான நடவடிக்கை" என்று அழைக்கிறது.
கணக்கெடுப்பில் சாதி என்ற அரசியல் ரீதியாக உணர்வுப்பூர்வமான விஷயமும் அடங்கும்.
வரவிருக்கும் கணக்கெடுப்பு மிகப்பெரிய தளவாட சவாலை முன்வைக்கிறது. இந்தக் கணக்கெடுப்பு இரண்டு கட்டங்களில் நடைபெறும்.
புதன்கிழமை தொடங்கி செப்டம்பர் வரை நடக்கும் முதல் கட்டத்தில், வீட்டுவசதி விவரங்களை பதிவு செய்ய படிப்படியாக ஒரு மாத கணக்கெடுப்பு நடைபெறும்.
இந்தச் செயல்முறையானது, வீடு வீடாகச் சென்று பார்வையிடுவதையும், செயற்கைக்கோள் படங்களைப் பயன்படுத்தும், 16 மொழிகளில் கிடைக்கக்கூடிய ஒரு செயலியுடன் இணைக்கப்பட்ட இணைய சுய-கணக்கெடுப்பு விருப்பத்தையும் ஒருங்கிணைக்கும்.
இரண்டாவது கட்டம் மக்கள்தொகை, சமூக, பொருளாதார விவரங்கள் உட்பட ஜனத்தொகை தரவு, சாதி என்ற மிகவும் சர்ச்சையான விஷயத்தில் கவனம் செலுத்தும்.
இந்தியாவில் சாதி வளங்கள், கல்வி, வாய்ப்புகளுக்கான அணுகலை வடிவமைக்கும் சமூக அந்தஸ்தின் வலிமையான தீர்மானிக்கும் காரணியாக தொடர்கிறது.
2011-ல் நடத்தப்பட்ட சாதி கணக்கெடுப்பு தரவில் முரண்பாடுகள் இருப்பதாக கூறி வெளியிடப்படவில்லை.
1931-ல் பிரிட்டிஷ் காலனி ஆட்சியின் போது கணக்கெடுப்பின் ஒரு பகுதியாக விரிவான சாதி தரவு கடைசியாக சேகரிக்கப்பட்டது.
அதற்கு பிறகு வந்த அரசாங்கங்கள் நிர்வாக சிக்கல்கள், சமூக பதற்றங்கள் ஏற்படலாம் என்ற கவலைகளைக் காரணமாக கூறி தரவைப் புதுப்பிப்பதை எதிர்த்தன.
நாட்டின் பெரும்பாலான பகுதிகளில், மக்கள்தொகை கணக்கெடுப்பு மார்ச் 1, 2027 என்ற குறிப்பு தேதிக்கு முந்தைய வாரங்களில் நடைபெறும்.
சர்ச்சைக்குரிய ஜம்மு, காஷ்மீர் பிரதேசnகளில் பனிப்பொழிவு தொடங்குவதற்கு முன்பு அக்டோபர் 1, 2026-க்கு முன்பாக நடைபெறும்.
கோவிட்-19 தொற்றுநோயால் 2021 கணக்கெடுப்பு தாமதமானதால், இந்தியா 2011-க்கு பிறகு மக்கள்தொகை கணக்கெடுப்பு நடத்தவில்லை.
கடந்த கணக்கெடுப்பின்படி, இந்தியாவின் மக்கள்தொகை 1.21 பில்லியனாக இருந்தது. 2023-ல், 1.42 பில்லியனுக்கும் மேற்பட்ட மக்களுடன் இந்தியா சீனாவை பின்னிட்டு உலகின் மிக அதிக மக்கள்தொகை கொண்ட நாடாக மாறியதாக ஐக்கிய நாடுகள் சபை மதிப்பிட்டது.
-சங்கீர்த்தனா
தொடர்புடைய செய்திகள்
October 5, 2026, 4:54 pm
கள்ளக் காதலியுடன் ஊர் சுற்றியபோது காரை இடைமறித்த மனைவியை பானெட்டில் இழுத்து சென்ற கணவர்
October 3, 2026, 3:44 pm
இந்திய விமானி ஸ்மித் மச்சாருக்கு, இஸ்ரேலிய சுற்றுலா பயணிகள் பதாகை ஏந்தி நன்றி தெரிவித்தனர்
October 1, 2026, 8:31 pm
டில்லியில் பெண்களுக்குப் பாதுகாப்பு கோரி மாணவர்கள் ஆர்ப்பாட்டம்
October 1, 2026, 5:55 pm
174 பேர் இருந்த விமானத்தைக் காப்பாற்ற உதவிய இந்திய விமானி
September 30, 2026, 10:34 am
டெல்லியில் இன்று நடைபெறும் ‘இண்டியா’ கூட்டணி கூட்டத்தை திமுக புறக்கணிக்கிறது: டி.கே.எஸ். இளங்கோவன் அறிவிப்பு
September 28, 2026, 1:47 pm
பெங்களூரு விமான நிலைய ஓடுபாதை தரையில் மோதிய இண்டிகோ விமானத்தின் வால் பகுதி
September 26, 2026, 9:26 pm
இந்தியத் தலைமைத் தேர்தல் ஆணையர் ஞானேஷ் குமார் பதவி விலகக் கோரி நாடு தழுவிய போராட்டம்
September 23, 2026, 3:13 pm
பிகாரில் கொட்டித்தீர்த்த கனமழை: 50 லட்சம் மக்கள் வெள்ளத்தால் பாதிப்பு
September 21, 2026, 10:20 pm
