செய்திகள் இந்தியா
மும்பையில் இரயில் விபத்து: தண்டவாளத்தைக் கடக்க முயன்றபோது நேர்ந்த உயிர் பலி
மும்பை:
மும்பையில் உள்ள காட்கோபர் இரயில் நிலையத்தில், வேகமாக வந்த இரயில் மோதியதில் நபர் ஒருவர் பரிதாபமாக உயிரிழந்தார்.
பரபரப்பாக இயங்கிக் கொண்டிருந்த இந்த இரயில் நிலையத்தில், தண்டவாளத்தைக் கடக்க முயன்ற அந்த நபர் மீது மின்சார இரயில் மோதியதில் இந்த விபத்து நிகழ்ந்துள்ளது.
நேற்று நடைபெற்ற இந்தச் சம்பவத்தின்போது, பலத்த காயமடைந்த அந்த நபரை அங்கிருந்த பொதுமக்கள், இரயில்வே பாதுகாப்புப் படையினர் உடனடியாக மீட்டு அருகில் உள்ள மருத்துவமனைக்குக் கொண்டு சென்றனர். இருப்பினும், அவர் ஏற்கனவே உயிரிழந்துவிட்டதாக மருத்துவர்கள் உறுதிப்படுத்தினர்.
இந்த விபத்து காரணமாக அந்தப் பாதையில் இரயில் போக்குவரத்து சிறிது நேரம் பாதிக்கப்பட்டது.
இச்சம்பவம் குறித்து இரயில்வே காவல்துறை வழக்குப் பதிவு செய்து தீவிர விசாரணை மேற்கொண்டு வருகிறது. உயிரிழந்த நபர் யார் என்பது குறித்த அடையாளம் இன்னும் முழுமையாகத் தெரியவில்லை. அவர் தவறி விழுந்தாரா அல்லது வேண்டுமென்றே தண்டவாளத்தில் இறங்கினாரா என்பது குறித்துக் கண்காணிப்பு கேமரா காட்சிகளைப் போலிசார் ஆய்வு செய்து வருகின்றனர்.
மும்பை இரயில் நிலையங்களில் இத்தகைய விபத்துகள் தொடர்ந்து அதிகரித்து வருவதால், பயணிகள் எச்சரிக்கையுடன் இருக்க வேண்டும் என்றும், தண்டவாளங்களைக் கடப்பதைத் தவிர்க்க வேண்டும் என்றும் இரயில்வே அதிகாரிகள் மீண்டும் அறிவுறுத்தியுள்ளனர். இத்துயரச் சம்பவம் காட்கோபர் பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
-கிரித்திக்கா
தொடர்புடைய செய்திகள்
October 5, 2026, 4:54 pm
கள்ளக் காதலியுடன் ஊர் சுற்றியபோது காரை இடைமறித்த மனைவியை பானெட்டில் இழுத்து சென்ற கணவர்
October 3, 2026, 3:44 pm
இந்திய விமானி ஸ்மித் மச்சாருக்கு, இஸ்ரேலிய சுற்றுலா பயணிகள் பதாகை ஏந்தி நன்றி தெரிவித்தனர்
October 1, 2026, 8:31 pm
டில்லியில் பெண்களுக்குப் பாதுகாப்பு கோரி மாணவர்கள் ஆர்ப்பாட்டம்
October 1, 2026, 5:55 pm
174 பேர் இருந்த விமானத்தைக் காப்பாற்ற உதவிய இந்திய விமானி
September 30, 2026, 10:34 am
டெல்லியில் இன்று நடைபெறும் ‘இண்டியா’ கூட்டணி கூட்டத்தை திமுக புறக்கணிக்கிறது: டி.கே.எஸ். இளங்கோவன் அறிவிப்பு
September 28, 2026, 1:47 pm
பெங்களூரு விமான நிலைய ஓடுபாதை தரையில் மோதிய இண்டிகோ விமானத்தின் வால் பகுதி
September 26, 2026, 9:26 pm
இந்தியத் தலைமைத் தேர்தல் ஆணையர் ஞானேஷ் குமார் பதவி விலகக் கோரி நாடு தழுவிய போராட்டம்
September 23, 2026, 3:13 pm
பிகாரில் கொட்டித்தீர்த்த கனமழை: 50 லட்சம் மக்கள் வெள்ளத்தால் பாதிப்பு
September 21, 2026, 10:20 pm
