செய்திகள் இந்தியா
டெல்லியில் அதிர்ச்சி சம்பவம்: சிலிண்டரால் அடித்து மனைவியைக் கொன்ற கணவன் கைது
டெல்லி:
இந்தியாவின் தலைநகரான டெல்லியில் குடும்பத் தகராறு காரணமாக மனைவியை எரிவாயு சிலிண்டரால் அடித்துக் கொன்ற கணவனின் செயல் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
டெல்லி, பாலாம் பகுதியில் வசித்து வந்த தம்பதியினரிடையே ஏற்பட்ட கடுமையான வாக்குவாதம், இந்தத் துயரமான கொலைச் சம்பவத்தில் முடிந்துள்ளது.
சம்பவத்தன்று கணவன்-மனைவி இருவருக்கும் இடையே வாய்த்தகராறு ஏற்பட்டுள்ளது. இதில் ஆத்திரமடைந்த கணவன், வீட்டிலிருந்த சமையல் எரிவாயு சிலிண்டரை எடுத்து மனைவியின் தலையில் பலமுறை தாக்கியுள்ளார்.
பலத்த காயமடைந்த அந்தப் பெண் சம்பவ இடத்திலேயே ரத்த வெள்ளத்தில் உயிரிழந்தார். தகவல் அறிந்து விரைந்து வந்த காவல்துறையினர், சடலத்தைக் கைப்பற்றிப் பிரேதப் பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர்.
இந்தக் கொடூரச் செயலில் ஈடுபட்ட கணவனைத் டெல்லி போலிசார் உடனடியாகக் கைது செய்துள்ளனர். முதற்கட்ட விசாரணையில், தம்பதியினரிடையே நீண்ட நாட்களாகக் கருத்து வேறுபாடு இருந்து வந்ததும், அடிக்கடி சண்டையிட்டுக் கொண்டதும் தெரியவந்துள்ளது. அந்த நபர் மீது கொலை வழக்குப் பதிவு செய்யப்பட்டுத் தீவிர விசாரணை மேற்கொள்ளப்பட்டு வருகிறது.
குடும்ப உறவுகளுக்குள் ஏற்படும் இத்தகைய வன்முறைச் சம்பவங்கள் டெல்லி மக்களிடையே பெரும் அச்சத்தையும் சோகத்தையும் ஏற்படுத்தியுள்ளன. இக்கொலை தொடர்பான கூடுதல் ஆதாரங்களைச் சேகரிக்க தடய அறிவியல் நிபுணர்களும் சம்பவ இடத்தைச் சோதனையிட்டு வருகின்றனர்.
-கிரித்திக்கா
தொடர்புடைய செய்திகள்
October 5, 2026, 4:54 pm
கள்ளக் காதலியுடன் ஊர் சுற்றியபோது காரை இடைமறித்த மனைவியை பானெட்டில் இழுத்து சென்ற கணவர்
October 3, 2026, 3:44 pm
இந்திய விமானி ஸ்மித் மச்சாருக்கு, இஸ்ரேலிய சுற்றுலா பயணிகள் பதாகை ஏந்தி நன்றி தெரிவித்தனர்
October 1, 2026, 8:31 pm
டில்லியில் பெண்களுக்குப் பாதுகாப்பு கோரி மாணவர்கள் ஆர்ப்பாட்டம்
October 1, 2026, 5:55 pm
174 பேர் இருந்த விமானத்தைக் காப்பாற்ற உதவிய இந்திய விமானி
September 30, 2026, 10:34 am
டெல்லியில் இன்று நடைபெறும் ‘இண்டியா’ கூட்டணி கூட்டத்தை திமுக புறக்கணிக்கிறது: டி.கே.எஸ். இளங்கோவன் அறிவிப்பு
September 28, 2026, 1:47 pm
பெங்களூரு விமான நிலைய ஓடுபாதை தரையில் மோதிய இண்டிகோ விமானத்தின் வால் பகுதி
September 26, 2026, 9:26 pm
இந்தியத் தலைமைத் தேர்தல் ஆணையர் ஞானேஷ் குமார் பதவி விலகக் கோரி நாடு தழுவிய போராட்டம்
September 23, 2026, 3:13 pm
பிகாரில் கொட்டித்தீர்த்த கனமழை: 50 லட்சம் மக்கள் வெள்ளத்தால் பாதிப்பு
September 21, 2026, 10:20 pm
