நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image

செய்திகள் மலேசியா

By
|
பகிர்

காரிலிருந்து வாணவேடிக்கை பட்டாசு வெடித்ததாக நம்பப்படும் நால்வர் கைது

ஷாஆலம்:

ஓடும் காரிலிருந்து வாணவேடிக்கை விட்டதாக நம்பப்படும் நால்வர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

21லிருந்து 28 வயதுக்கு உட்பட்ட ஆண்கள் மூவரும் பெண் ஒருவரும் கைது செய்யப்பட்டதாக ‌ஷாஆலம் போலிஸ் அதிகாரி ராம்சே எம்போல் தெரிவித்தார். ‌

சுங்கை பூலோ பகுதிகளில் சந்தேகப் பேர்வழிகள் கைது செய்யப்பட்டதாக அவர் தெரிவித்தார்.

அவர்களிடம் இருந்து ஒரு கார், ஒரு கைப்பேசி, ஒரு வாணவேடிக்கை ஆகியவை பறிமுதல் செய்யப்பட்டன.

மேல் விசாரணைக்காக சந்தேகப் பேர்வழிகள் மார்ச் மாதம் 31ஆம் தேதி வரை தடுப்புக் காவலில் வைக்கப்பட்டுள்ளனர் என்று அவர் குறிப்பிட்டார்.

- பார்த்திபன் நாகராஜன்

தொடர்புடைய செய்திகள்

Copyright © 2026, நம்பிக்கை செய்திகள்

+ - reset