செய்திகள் மலேசியா
இஸ்திஸ்காரா தொழுகைக்குக் கிடைத்த பலன்: 100 நாள் தாகம் தீர்த்த வான்மழை
பாடாங் பேசார்:
வெப்பமான வானிலையால் 100 நாட்களுக்கும் மேலாக வானம் பார்த்த பூமியாக இருந்த பெர்லிஸின் சில பகுதிகளில் நேற்று மாலை மழை பெய்தது.
மழை பெய்தாக அறிவிக்கப்பட்ட பகுதிகளில் சந்துவாரி இகான் ஐர் தாவார் தாசிக் திமா தாசோ, பேசேரி, புக்கிட் ஜெர்னே, பாத்து பெர்தாங்கப், பெலுகார் லேங்கா, கூபாங் திகா, புக்கிட் சாபாங், செமாடோங் ஆகியவை அடங்கும்.
மார்ச் 26-ல் நடைபெற்ற இஸ்திஸ்காரா தொழுகையில் 1,000-க்கும் மேற்பட்ட தொழுகையாளர்களுடன் பெர்லிஸ் அரசர் துவாங்கு சையீட் சிராஜுதீன் புத்ரா ஜமாலுல்லைல் கலந்துகொண்ட பிறகு, பெர்லிஸ் மக்களின் பிரார்த்தனைக்கு பதிலாக இந்த மழை கருதப்படுகிறது.
இதற்கு முன்பு, கடுமையான வெப்ப வானிலையால் திமா தாசோ அணையில் நீர்மட்டம் குறைந்தது, அணையின் கூண்டுகளில் உள்ள ஆயிரக்கணக்கான நன்னீர் மீன்களின் நிலை குறித்த கவலைகளை ஏற்படுத்தியது.
அணையில் தண்ணீர் சேமிப்பு மேலும் மழையில்லாமல் வெப்ப வானிலை தொடர்ந்தால் இன்னும் 81 நாட்கள் மட்டுமே நீடிக்கும் என்று நீர்ப்பாசனம் வடிகால் துறை (ஜெ.பி.எஸ்) தெரிவித்தது.
-சங்கீர்த்தனா
தொடர்புடைய செய்திகள்
March 30, 2026, 12:56 pm
விவசாய உள்ளீடுகளில் ஒரே வழங்குனரை சார்ந்திருப்பதை குறைக்க வேண்டும்: டத்தோ டாக்டர் அஸ்மான்
March 30, 2026, 12:50 pm
அனுமதி இன்றி செயல்பட்ட மலையேற்ற நடவடிக்கை: கோம்பாக் காப்பகக் காட்டில் 92 பேர் கைது
March 30, 2026, 12:15 pm
தலைமை நீதிபதி, ஐ.ஜி.பி-க்கு சபாவின் உயரிய கௌரவம்
March 30, 2026, 11:49 am
மானிய விலைச் சமையல் எண்ணெய் கடத்தல் முறியடிப்பு: லஹாட் டத்துவில் 61 வயது ஆடவர் கைது
March 30, 2026, 11:04 am
