நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image

செய்திகள் மலேசியா

By
|
பகிர்

புதைக்கப்பட்ட சிசுவின் எலும்புக்கூடு: காதலன் உட்பட ஒரே குடும்பத்தைச் சேர்ந்த நால்வர் கைது

அலோர் காஜா: 

மலாக்கா, கெலெமாக் பகுதியில் உள்ள ஒரு வீட்டின் முற்றத்தில் சிசுவின் எலும்புக்கூடு கண்டெடுக்கப்பட்ட விவகாரம் தொடர்பாகக் கைது செய்யப்பட்ட ஐந்து சந்தேக நபர்களின் தடுப்புக்காவல் இன்று மேலும் மூன்று நாட்களுக்கு நீட்டிக்கப்பட்டுள்ளது.

14 முதல் 40 வயதுக்குட்பட்ட இந்தச் சந்தேக நபர்களை எதிர்வரும் புதன்கிழமை வரை காவலில் வைத்து விசாரிக்க நீதிமன்றம் அனுமதி வழங்கியுள்ளது.

இந்த வழக்கில் கைது செய்யப்பட்டவர்களில் 19 வயதுடைய இளம்பெண், அவரது தாய், சகோதரி, தம்பி, அந்தப் பெண்ணின் காதலன் ஆகிய ஐவர் அடங்குவர்.

அந்த 19 வயதுப் பெண்ணே உயிரிழந்த சிசுவின் தாய் எனப் போலிசார் சந்தேகிக்கின்றனர். சுமார் நான்கு மாதங்களுக்கு முன்பு பிறந்த அந்தச் சிசுவின் உடல், வீட்டின் முற்றத்தில் இரகசியமாகப் புதைக்கப்பட்டிருப்பது கடந்த மார்ச் 25-ஆம் தேதி கண்டறியப்பட்டது.

மலாக்கா மாநிலப் போலிஸ் தலைவர் டத்தோ சுல்கைரி முக்தார் இது குறித்துக் கூறுகையில், "குழந்தையின் பிறப்பை மறைத்தல்" என்ற குற்றச்சாட்டின் கீழ், தண்டனைச் சட்டத்தின் படி இந்த விசாரணை தீவிரப்படுத்தப்பட்டுள்ளது என்றார்.

இந்த வழக்கின் விசாரணை அறிக்கை இன்று அரசு வழக்கறிஞரின் (DPP) பார்வைக்கு மேலதிக நடவடிக்கைக்காக அனுப்பப்பட உள்ளது.

பெருநாள் கொண்டாட்டங்களுக்கு மத்தியில் ஒரு குடியிருப்புப் பகுதியில் நிகழ்ந்த இந்தச் சம்பவம் அப்பகுதி மக்களிடையே பெரும் அதிர்ச்சியையும் சோகத்தையும் ஏற்படுத்தியுள்ளது. முறையான மருத்துவ உதவியின்றி குழந்தை பிறந்துள்ளதா அல்லது திட்டமிட்டு மறைக்கப்பட்டதா என்ற கோணத்தில் போலிசார் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

-கிரித்திக்கா

தொடர்புடைய செய்திகள்

Copyright © 2026, நம்பிக்கை செய்திகள்

+ - reset