செய்திகள் மலேசியா
219வது போலிஸ் தினத்தையொட்டி சிகாமாட் போலிஸ் தலைமையகத்தில் சிறப்பு புஜை
சிகாமாட்:
ஜொகூர் மாநிலம் சிகாமாட் மாவட்ட காவல் தலைமையகத்தின் ஏற்பாட்டில், 219ஆவது போலிஸ் தினத்தை முன்னிட்டு சிறப்பு வழிபாட்டு நிகழ்ச்சி விமரிசையாக நடைபெற்றது.
இந்த நிகழ்ச்சி சிகாமாட் ஜாலான் ஹசான் பகுதியில் அமைந்துள்ள தண்டாயுதபாணி ஆலயத்தில் நடைபெற்றது.
இந்நிகழ்வில் சிகாமாட் மாவட்ட துணை காவல் தலைவர் டிஎஸ்பி நந்தா த/பெ முனியாண்டி தலைமையில், மாவட்ட காவல் அதிகாரிகள், ஓய்வுபெற்ற போலீஸ் அதிகாரிகள், பெத்குமக்கள் என சுமார் 150 பேர் பங்கேற்றனர்.
நிகழ்ச்சி இந்து மத வழிபாட்டுடன் தொடங்கி, பின்னர் துணை காவல் தலைவர் டிஎஸ்பி நந்தா சிறப்புரையாற்றினார்.
தனது உரையில், சமூகத்தினர் குற்றச்செயல்களை தடுப்பதில் போலீசுடன் இணைந்து செயல்பட வேண்டியதன் அவசியத்தை வலியுறுத்தினார்.
மேலும், Volunteer Smartphone Patrol (VSP) செயலியை பயன்படுத்தி சந்தேகத்திற்கிடமான செயல்பாடுகளை அறிவிக்குமாறும் பொதுமக்களை அவர் கேட்டுக்கொண்டார்.
நிகழ்ச்சியின் ஒரு பகுதியாக, விழிப்புணர்வு பிரசுரங்கள் பொதுமக்களுக்கு வழங்கப்பட்டதுடன், கலந்துகொண்டவர்களுக்கு சிறப்பு பரிசுப்பைகளும் வழங்கப்பட்டன.
இந்த நிகழ்ச்சி மூலம் காவல் துறைக்கும் சமூகத்தினருக்கும் இடையிலான உறவு மேலும் வலுப்பெற்றதுடன் போலிசும் மக்கள் – பிரியாத உறவு என்ற கோட்பாடு நடைமுறையில் உறுதிப்படுத்தப்பட்டது. ..
சமூகத்துடன் நெருக்கமாக செயல்படும் போலீஸ் துறையின் நல்லிணக்க அணுகுமுறை, பொதுமக்களின் நம்பிக்கையையும் ஆதரவையும் அதிகரிக்கும் விதமாகவும் நிகழ்ச்சி அமைந்தது.
- பார்த்திபன் நாகராஜன்
தொடர்புடைய செய்திகள்
March 30, 2026, 11:49 am
மானிய விலைச் சமையல் எண்ணெய் கடத்தல் முறியடிப்பு: லஹாட் டத்துவில் 61 வயது ஆடவர் கைது
March 30, 2026, 11:25 am
இஸ்திஸ்காரா தொழுகைக்குக் கிடைத்த பலன்: 100 நாள் தாகம் தீர்த்த வான்மழை
March 30, 2026, 11:04 am
சிலாங்கூர் சாலைகளில் ரகசியக் கண்காணிப்பைத் தீவிரப்படுத்திய போக்குவரத்துத் துறை
March 30, 2026, 10:43 am
மொழி காக்கும் போரில் ஒரு துணிச்சலான குரல்: பேனா ஆறு தசாப்தங்களாக மொழி, இலக்கியத்தை மேம்படுத்துகிறது
March 30, 2026, 10:34 am
புதைக்கப்பட்ட சிசுவின் எலும்புக்கூடு: காதலன் உட்பட ஒரே குடும்பத்தைச் சேர்ந்த நால்வர் கைது
March 30, 2026, 10:24 am
கிளாந்தான் ஆற்றில் நீர்மட்டம் சரிவு: சுற்றுச்சூழல் சமநிலை பாதிப்பு குறித்து ஆய்வாளர்கள் எச்சரிக்கை
March 30, 2026, 10:18 am
