நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image

செய்திகள் மலேசியா

By
|
பகிர்

மானிய விலைச் சமையல் எண்ணெய் கடத்தல் முறியடிப்பு: லஹாட் டத்துவில் 61 வயது ஆடவர் கைது

லஹாட் டத்து: 

மானிய விலையிலான சமையல் எண்ணெய் பாக்கெட்டுகளை லாரியில் மறைத்து வைத்துக் கடத்த முயன்ற ஒரு கும்பலின் முயற்சியைக் கடல்சார் காவல் படையினர் வெற்றிகரமாக முறியடித்துள்ளனர்.

நேற்று மாலை சுமார் 3:10 மணியளவில் கம்போங் அத்தியாம் பகுதியில் நடத்தப்பட்ட இந்த அதிரடிச் சோதனையில், 1,088 சமையல் எண்ணெய் பாக்கெட்டுகள் அடங்கிய 64 பெட்டிகள் பறிமுதல் செய்யப்பட்டன.

இந்தச் சோதனையின்போது, லாரியை ஓட்டி வந்த 61 வயதுடைய உள்நாட்டு ஆடவர் ஒருவரைப் போலிசார் கைது செய்துள்ளனர்.

லாரியின் மேற்பகுதி தார்பாய் எனப்படும் கூரைத் துணியால் மூடப்பட்டிருந்தது. அதனைச் சோதனையிட்டபோது, உள்ளே சந்தேகத்திற்குரிய கருப்பு நிற நெகிழிப் பைகள் இருப்பதைக் கண்டறிந்தனர். அந்தப் பைகளுக்குள் 'சாப் மாவார்' (Cap Mawar) ரக மானிய விலைச் சமையல் எண்ணெய் பெட்டிகள் மறைத்து வைக்கப்பட்டிருந்தது கண்டுபிடிக்கப்பட்டது.

சம்பந்தப்பட்ட லாரி ஓட்டுநரிடம் உள்நாட்டு வணிகம், வாழ்க்கைச் செலவின அமைச்சின் முறையான அனுமதிப் பத்திரங்கள் அல்லது ஆவணங்கள் ஏதும் இல்லை என்பது விசாரணையில் தெரியவந்தது.

பறிமுதல் செய்யப்பட்ட சமையல் எண்ணெய், லாரியின் மொத்த மதிப்பு சுமார் RM42,790 ரிங்கிட் என மதிப்பிடப்பட்டுள்ளது.

இந்தச் சம்பவம் குறித்து 1961-ஆம் ஆண்டு விநியோகக் கட்டுப்பாட்டுச் சட்டத்தின் கீழ் வழக்குப் பதிவு செய்யப்பட்டுத் தீவிர விசாரணை மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

அத்தியாவசியப் பொருட்களைச் சட்டவிரோதமாகப் பதுக்குபவர்கள், கடத்துபவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என அதிகாரிகள் எச்சரித்துள்ளனர்.

-கிரித்திக்கா

தொடர்புடைய செய்திகள்

Copyright © 2026, நம்பிக்கை செய்திகள்

+ - reset