செய்திகள் இந்தியா
இந்தியாவில் பாராசிட்டமால், ஆன்டிபயாட்டிக் உள்ளிட்ட 900 அத்தியாவசிய மருந்துகளின் விலைகள் ஏப்ரல் 1 முதல் உயர்த்தப்படுகிறது
டெல்லி:
இந்தியாவில் பாராசிட்டமால், ஆன்டிபயாட்டிக் உள்ளிட்ட 900 அத்தியாவசிய மருந்துகளின் விலை வரும் ஏப்ரல் 1 முதல் உயர்கிறது.
இந்திய தேசிய மருந்து விலை நிர்ணய ஆணையத்தின் அறிவிப்பின்படி, இந்த உயர்வு சுமார் 0.65% ஆக இருக்கும்.
மூலப்பொருட்கள், பேக்கேஜிங் செலவு அதிகரித்துள்ளதே இதற்கு முக்கியக் காரணம் என கூறப்படுகிறது.
வலி நிவாரணிகள், நுண்ணுயிர் எதிர்ப்பிகள் உள்ளிட்ட சுமார் 900 அத்தியாவசிய மருந்துகளின் விலை உயர்வு ஏப்ரல் 1 முதல் 0.65% ஆக இருக்கும் என்றும், அதிகபட்ச சில்லறை விலையை அதிகரிக்க உற்பத்தியாளருக்கு அரசின் முன் அனுமதி தேவையில்லை.
தற்போதைய நிலவரம் குறித்து ஒன்றிய அரசு நன்கு அறிந்திருப்பதாகவும், விலை உயர்வைக் கட்டுப்படுத்த தேவையான அனைத்து நடவடிக்கைகளையும் எடுத்து வருவதாக கூறப்பட்டுள்ளது.
மேலும், வளைகுடா யுத்த மோதல்களின் தாக்கங்களை கையாளுவதற்காக ஏழு அதிகாரம் அளிக்கப்பட்ட குழுக்களை அமைத்த இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி, இந்த நெருக்கடிகளைத் தடுப்பதற்காக டீம் இந்தியா' அணுகுமுறையில் ஒன்றிய அரசுடன் மாநில அரசுகள் இணைந்து செயல்படுமாறு அவர் வலியுறுத்தினார்.
- ஆர்யன்
தொடர்புடைய செய்திகள்
July 9, 2026, 10:42 am
பயணத்தோடு ஒரு தேனிலவு: முதல் இரவு அறைபோல் மாற்றப்பட்ட ரயில் பயணப் பெட்டி
July 8, 2026, 3:28 pm
மும்பையில் கனமழை; 1,100-க்கும் மேற்பட்ட மரங்கள் வேரோடு சாய்ந்தன: விமான சேவைகள் பாதிப்பு
July 8, 2026, 7:26 am
வய நாடு நிலச்சரிவில் சிக்கி இதுவரை 3 பேர் உயிரிழந்துள்ளனர்: இன்றும் கன மழைக்கு வாய்ப்பு
July 7, 2026, 12:55 pm
இந்தோனேசியாவில் மோடிக்கு உற்சாக வரவேற்பு
July 4, 2026, 5:32 pm
மும்பையில் கனமழை: சிவப்பு எச்சரிக்கை விடப்பட்டுள்ளது
June 29, 2026, 5:59 pm
