செய்திகள் மலேசியா
தாய்லாந்துக்கு பெட்ரோல் கடத்தல் முயற்சி முறியடிப்பு: மூவர் கைது
ரந்தாவ் பஞ்சாங்:
உள்நாட்டு வர்த்தகம் மற்றும் வாழ்வுக் கட்டண அமைச்சகம், தாய்லாந்துக்கு பெட்ரோல் கடத்த முயன்றதாக சந்தேகிக்கப்படும் இரண்டு ஆண்கள், ஒரு பெண்ணை கைது செய்துள்ளது. இன்று அதிகாலை நடைபெற்ற சோதனையில் மொத்தம் RM15,619.20 ரிங்கிட் மதிப்புள்ள பெட்ரோல் பறிமுதல் செய்யப்பட்டது.
சந்தேக நபர்கள் மூவரும் தனித்தனியாக கார்களை ஓட்டி, குடிவரவு, சுங்கச் சோதனை மையத்திற்குள் நுழைந்தபோது காலை 7.30 மணியளவில் தடுக்கப்பட்டனர்.
முதல் வழக்கில் 53 வயது ஆண் ஒருவரிடமிருந்து 50 லிட்டர் பெட்ரோல், வாகனம் பறிமுதல் செய்யப்பட்டு RM5,193.50 ரிங்கிட் மதிப்பிடப்பட்டது. இரண்டாவது வழக்கில் 56 வயது ஆணிடமிருந்து 60 லிட்டர் பெட்ரோல், வாகனம் RM5,232.20 ரிங்கிட் மதிப்புடன் பறிமுதல் செய்யப்பட்டது. மூன்றாவது வழக்கில் 35 வயது பெண்ணிடமிருந்து 50 லிட்டர் பெட்ரோல், வாகனம் பறிமுதல் செய்யப்பட்டு RM5,193.50 ரிங்கிட் என மதிப்பிடப்பட்டது.
ஆரம்பகட்ட விசாரணையில், இந்த பெட்ரோல் அண்டை நாட்டில் விற்பனை செய்ய எடுத்துச் செல்லப்பட்டதாக சந்தேக நபர்கள் ஒப்புக்கொண்டுள்ளனர். இவ்வழக்குகள் கட்டுப்பாட்டு பொருட்கள் சட்டம் 196யின் கீழ் விசாரிக்கப்படுகின்றன.
-கிரித்திக்கா
தொடர்புடைய செய்திகள்
March 27, 2026, 12:58 pm
மாற்றுத்திறனாளிப் பெண்ணைச் சீரழித்த எச்.ஐ.வி நோயாளி: பாலியல் வன்கொடுமை வழக்கில் அதிரடித் தீர்ப்பு
March 27, 2026, 12:56 pm
எல்லை மீறிய விபரீதம்: மயானத்தில் அடாவடி செய்த இந்தோனேசியப் பெண்
March 27, 2026, 12:54 pm
பள்ளிவாசல் அருகே அதிர்ச்சி சம்பவம்: அழுகிய நிலையில் மீட்கப்பட்ட பச்சிளம் குழந்தையின் உடல்
March 27, 2026, 12:52 pm
உரிமம் இன்றி கார் ஓட்டிய வங்கதேசத்தவர்: காரைப் பறிமுதல் செய்த போக்குவரத்துத் துறை
March 27, 2026, 12:26 pm
மலேசியாவின் 13-வது திட்டத்தில் அணுசக்தி
March 27, 2026, 12:13 pm
தொலைபேசி அழைப்பால் வந்த வினை: பினாங்கில் 4.5 லட்சம் ரிங்கிட்டைப் பறிகொடுத்த பெண் இயக்குநர்
March 27, 2026, 12:11 pm
