செய்திகள் மலேசியா
எல்லை மீறிய விபரீதம்: மயானத்தில் அடாவடி செய்த இந்தோனேசியப் பெண்
ஜகார்த்தா:
சமூக வலைதளங்களில் அதிக 'விருப்பு' (Likes), பார்வைகளைப் பெறுவதற்காக இந்தோனேசியாவைச் சேர்ந்த பெண் ஒருவர், நள்ளிரவில் மயானத்திற்குள் புகுந்து கல்லறையைத் தோண்டிய செயல் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
இச் செயலை அவர் காணொலியாகப் படம்பிடித்து இணையத்தில் பதிவேற்றியதைத் தொடர்ந்து, பொதுமக்களிடையே கடும் எதிர்ப்பு கிளம்பியுள்ளது.
அந்தக் காணொலியில், அந்தப் பெண் எவ்வித அச்சமுமின்றி மண்வெட்டியைக் கொண்டு கல்லறையைத் தோண்டுவது போன்ற காட்சிகள் இடம்பெற்றுள்ளன. 'லம்பே துரா' என்ற சமூக வலைதளப் பக்கத்தில் பகிரப்பட்ட இந்தக் காட்சி, இறந்தவர்களின் இறுதி ஓய்விடத்திற்குச் செய்யப்படும் பெரும் அவமரியாதை எனப் பலரால் விமர்சிக்கப்பட்டு வருகிறது.
இச்சம்பவம் நிகழ்ந்த துல்லியமான இடம் இன்னும் கண்டறியப்படவில்லை.
வெறும் விளம்பர மோகத்திற்காகத் தரம் தாழ்ந்த செயல்களில் ஈடுபடும் இத்தகைய நபர்கள் மீது கடுமையான சட்ட நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும் என்று இணையவாசிகள் வலியுறுத்தி வருகின்றனர்.
"பதிவுகளுக்காக எதையும் செய்யத் துணியும் இப்போக்கு ஆபத்தானது" எனப் பல பயனர்கள் தங்களின் ஆதங்கத்தைப் பதிவு செய்துள்ளனர். இச்சம்பவம் இந்தோனேசியாவில் பெரும் விவாதப் பொருளாக மாறியுள்ளது.
-கிரித்திக்கா
தொடர்புடைய செய்திகள்
March 27, 2026, 12:58 pm
மாற்றுத்திறனாளிப் பெண்ணைச் சீரழித்த எச்.ஐ.வி நோயாளி: பாலியல் வன்கொடுமை வழக்கில் அதிரடித் தீர்ப்பு
March 27, 2026, 12:54 pm
பள்ளிவாசல் அருகே அதிர்ச்சி சம்பவம்: அழுகிய நிலையில் மீட்கப்பட்ட பச்சிளம் குழந்தையின் உடல்
March 27, 2026, 12:52 pm
உரிமம் இன்றி கார் ஓட்டிய வங்கதேசத்தவர்: காரைப் பறிமுதல் செய்த போக்குவரத்துத் துறை
March 27, 2026, 12:26 pm
மலேசியாவின் 13-வது திட்டத்தில் அணுசக்தி
March 27, 2026, 12:13 pm
தொலைபேசி அழைப்பால் வந்த வினை: பினாங்கில் 4.5 லட்சம் ரிங்கிட்டைப் பறிகொடுத்த பெண் இயக்குநர்
March 27, 2026, 12:11 pm
