செய்திகள் மலேசியா
ஒரு மில்லியன் ரிங்கிட்டுக்கும் மேல் பணத்தை இழந்தும் காதல் மோசடியால் ஏமாற்றப்பட்டதை அறியாமலும் தவிக்கும் மூத்த பெண்மணி
கோலாலம்பூர்:
இங்கிலாந்தில் வசிக்கும் சிங்கப்பூரர் என்று கூறிக் கொண்ட ஒருவரால் காதல் மோசடிக்கு பாதிக்கப்பட்ட மூத்த பெண்மணி ஒருவர், ஒரு மில்லியன் ரிங்கிட்டுக்கும் மேல் பணத்தை இழந்ததாக நம்பப்படுகிறது.
பாதிக்கப்பட்ட மூத்த பெண்மணி பணம் தீர்ந்துவிட்ட போதிலும், அவர் ஏமாற்றப்பட்டதை இன்னும் உணரவில்லை.
மேலும் தனது காதலனுக்கு கொடுப்பதற்காக அவரிடமிருந்து 1,100 ரிங்கிட் கடன் வாங்க முயன்றதாகவும் கூறப்பட்டதை அடுத்து, அங்கிள் கெந்தாங் என்று பரவலாக அறியப்படும் சமூக ஆர்வலர் குவான் சீ ஹெங் இந்த விஷயத்தை வெளிப்படுத்தினார்.
எனவே, 65 வயதான அந்த மூத்த பெண்மணி கடன் கோரிக்கையை நிராகரிக்க வேண்டியிருந்தது என்று சீ ஹெங் கூறினார்.
பினாங்கைச் சேர்ந்த அந்தப் பாதிக்கப்பட்ட மூத்த பெண்மணி, அந்த நபரை இணையம் வழியாகச் சந்தித்ததாகக் கூறப்படுகிறது.
கிடைத்த தகவல்களின் அடிப்படையில், அந்த நபர் சிங்கப்பூரைச் சேர்ந்தவர் என்றும், தற்போது இங்கிலாந்தில் வசிப்பதாக கூறப்படுகிறது.
மேலும் ஒரு ஆலோசனை நிறுவனத்தில் பொறியாளராகப் பணி புரிவதாகவும் கூறிக் கொண்டுள்ளார்.
மலேசியாவிற்கு வந்து தன்னுடன் வசிக்கத் திட்டமிடுவதாகக் கூறிய அந்த நபருடன், பாதிக்கப்பட்ட மூத்த பெண்மணி பின்னர் காதல் வயப்பட்டதாக அவர் கூறினார்.
உண்மையில், பாதிக்கப்பட்ட மூத்த பெண்மணி நம்பிக்கையைப் பெறுவதற்காக, அந்த நபர் போலியானது என்று நம்பப்படும் ஒரு உள்ளூர் வங்கி நிலையான வைப்பு ஆவணத்தையும் காட்டினார் என்று அவரைத் தொடர்பு கொண்டபோது கூறினார்.
பாதிக்கப்பட்ட பெண் நீண்ட காலமாகத் தனியாக வாழ்ந்து வந்ததாகவும், தனது முதுமைக் காலத்தில் தன்னுடன் இருந்து தன்னைக் கவனித்துக் கொள்ள ஒருவரை எதிர்பார்த்திருந்ததாகவும் சீ ஹெங் கூறினார்.
- பார்த்திபன் நாகராஜன்
தொடர்புடைய செய்திகள்
March 27, 2026, 12:58 pm
மாற்றுத்திறனாளிப் பெண்ணைச் சீரழித்த எச்.ஐ.வி நோயாளி: பாலியல் வன்கொடுமை வழக்கில் அதிரடித் தீர்ப்பு
March 27, 2026, 12:56 pm
எல்லை மீறிய விபரீதம்: மயானத்தில் அடாவடி செய்த இந்தோனேசியப் பெண்
March 27, 2026, 12:54 pm
பள்ளிவாசல் அருகே அதிர்ச்சி சம்பவம்: அழுகிய நிலையில் மீட்கப்பட்ட பச்சிளம் குழந்தையின் உடல்
March 27, 2026, 12:52 pm
உரிமம் இன்றி கார் ஓட்டிய வங்கதேசத்தவர்: காரைப் பறிமுதல் செய்த போக்குவரத்துத் துறை
March 27, 2026, 12:26 pm
மலேசியாவின் 13-வது திட்டத்தில் அணுசக்தி
March 27, 2026, 12:13 pm
தொலைபேசி அழைப்பால் வந்த வினை: பினாங்கில் 4.5 லட்சம் ரிங்கிட்டைப் பறிகொடுத்த பெண் இயக்குநர்
March 27, 2026, 12:11 pm
