நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image

செய்திகள் மலேசியா

By
|
பகிர்

கரையான் அரிப்பால் பாதிக்கப்பட்ட கோப்பெங் தமிழ்ப்பள்ளி 14.5 மில்லியன் ரிங்கிட் செலவில் புதிதாக கட்டப்படும்: கல்வி துணையமைச்சர்

ஈப்போ:

கரையான் அரிப்பால் பாதிக்கப்பட்ட கோப்பெங் தமிழ்ப்பள்ளி 14.5 மில்லியன் ரிங்கிட் செலவில் புதிதாக கட்டப்படும்.

துணை கல்வியமைச்சர் வோங் கா வோ இதனை அறிவித்தார்.

கோப்பெங் தமிழ்ப்பள்ளி கிட்டத்தட்ட 80 ஆண்டுகள வரலாற்றை கொண்டதாகும்.

ஆரம்பத்தில் திருவள்ளுவர் தமிழ்ப் பாடசாலையாக இருந்த இப்பள்ளி தற்போது கோங்பெங் தமிழ்ப்பள்ளியாக இயங்கி வருகிறது.

நூற்றுக்கணக்கான மாணவர்கள் பயின்று வரும் இப்பள்ளியின் கட்டிடங்கள் கரையான் அரிப்பால் பாதிக்கப்பட்டுள்ளன.

குறிப்பாக இக்கட்டிடம் மாணவர்கள் கல்வி பயில்வதற்கு பாதுகாப்பானது அல்ல என அதிகாரிகளால் உறுதி செய்யப்பட்டது.

இதன் அடிப்படையில் கடந்த பட்ஜெட்டில் 14.5 மில்லியன் ரிங்கிட் இப்பள்ளியின் மேம்பாட்டிற்காக அரசாங்கம் ஒதுக்கியது.

இந்நிதியை கொண்டு புதியதாக மூன்று மாடி கட்டிடம் இங்கு கட்டப்படவுள்ளது.

இப்புதிய கட்டிடம் 6 வகுப்பறைகள், ஆசிரியர் அறைகள் உட்பட அனைத்து வசதிகளுடன் கொண்டு கட்டப்படவுள்ளது.

அடுத்த 22 மாதங்களில் இப்புதிய பள்ளிக்கூடம் கட்டி முடிக்கப்படும்.

அதுவரை மாணவர்கள் மிகவும் வசதியான கேபின்களில் கல்வியை தொடர்வார்கள் என்று அவர் கூறினார்.

- பார்த்திபன் நாகராஜன்

தொடர்புடைய செய்திகள்

Copyright © 2026, நம்பிக்கை செய்திகள்

+ - reset