செய்திகள் மலேசியா
தொலைபேசி அழைப்பால் வந்த வினை: பினாங்கில் 4.5 லட்சம் ரிங்கிட்டைப் பறிகொடுத்த பெண் இயக்குநர்
ஜார்ஜ்டவுன்:
பினாங்கு மாநிலத்தில் 69 வயதுடைய பெண் தொழிலதிபர் ஒருவர், தொலைபேசி வாயிலாகப் பேசிய மர்ம நபர்களிடம் சுமார் RM4,57,607 ரிங்கிட் பணத்தை இழந்துள்ளார். மலேசியத் தொடர்பு, பல்லூடக ஆணையத்தின் அதிகாரி, காவல்துறை அதிகாரி எனத் தங்களை அடையாளப்படுத்திக் கொண்ட நபர்களே இந்த மோசடியில் ஈடுபட்டுள்ளதாகப் பினாங்கு மாநிலக் காவல்துறைத் தலைவர் டத்தோ அசிசி இஸ்மாயில் தெரிவித்துள்ளார்.
கடந்த மார்ச் 1-ஆம் தேதி சிம்பாங் அம்பாட்டில் உள்ள தனது இல்லத்தில் இருந்தபோது, பாதிக்கப்பட்ட பெண்ணுக்கு ஒரு தொலைபேசி அழைப்பு வந்துள்ளது. அதில் பேசிய நபர், அந்தப் பெண்ணின் வங்கி கணக்கு சட்டவிரோத நடவடிக்கைகளில் ஈடுபட்டுள்ளதாகக் கூறிப் பயமுறுத்தியுள்ளார்.
பின்னர், அந்த அழைப்பு புக்கிட் அமான் காவல்துறை அதிகாரி எனச் சொல்லப்படும் மற்றொரு நபருக்கு இணைக்கப்பட்டுள்ளது. அந்த நபர், இப்பெண் பணமோசடி, போதைப்பொருள் கடத்தலில் ஈடுபட்டுள்ளதாகக் கூறி, அவருக்கு எதிராகக் கைது ஆணை பிறப்பிக்கப்பட்டுள்ளதாகப் பொய்யானத் தகவலைக் கூறி மிரட்டியுள்ளார்.
விசாரணை என்ற பெயரில் அந்தப் பெண்ணின் வங்கி விவரங்களைப் பெற்ற மோசடி கும்பல், அவரைக் குறிப்பிட்ட இடத்திற்குப் பணத்தைக் கொண்டு வருமாறு கட்டளையிட்டுள்ளது. இதனை நம்பிய அந்தப் பெண், கடந்த மார்ச் 11-ஆம் தேதி RM1,68,477 ரிங்கிட் பணத்தையும், அதன் பிறகு இரண்டு நாட்கள் கழித்து மீண்டும் RM2,89,130 ரிங்கிட் பணத்தையும் அடையாளம் தெரியாத நபர்களிடம் நேரில் ஒப்படைத்துள்ளார். தான் ஏமாற்றப்பட்டதை உணர்ந்த அந்தப் பெண், கடந்த வியாழக்கிழமை தெற்கு செபெராங் பெராய் மாவட்டக் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார்.
சமீபகாலமாக இதுபோன்ற தொலைபேசி வழி மோசடிகள் அதிகரித்து வருவதால், பொதுமக்கள் அறிமுகமில்லாத எண்களிலிருந்து வரும் அழைப்புகள் குறித்து எச்சரிக்கையாக இருக்க வேண்டும் என்றும், தங்களின் தனிப்பட்ட வங்கி விவரங்களை யாரிடமும் பகிர வேண்டாம் என்றும் காவல்துறை கேட்டுக்கொண்டுள்ளது. இது குறித்துத் தீவிர விசாரணை மேற்கொள்ளப்பட்டு வருகிறது.
-கிரித்திக்கா
தொடர்புடைய செய்திகள்
March 27, 2026, 12:58 pm
மாற்றுத்திறனாளிப் பெண்ணைச் சீரழித்த எச்.ஐ.வி நோயாளி: பாலியல் வன்கொடுமை வழக்கில் அதிரடித் தீர்ப்பு
March 27, 2026, 12:56 pm
எல்லை மீறிய விபரீதம்: மயானத்தில் அடாவடி செய்த இந்தோனேசியப் பெண்
March 27, 2026, 12:54 pm
பள்ளிவாசல் அருகே அதிர்ச்சி சம்பவம்: அழுகிய நிலையில் மீட்கப்பட்ட பச்சிளம் குழந்தையின் உடல்
March 27, 2026, 12:52 pm
உரிமம் இன்றி கார் ஓட்டிய வங்கதேசத்தவர்: காரைப் பறிமுதல் செய்த போக்குவரத்துத் துறை
March 27, 2026, 12:26 pm
மலேசியாவின் 13-வது திட்டத்தில் அணுசக்தி
March 27, 2026, 12:11 pm
