செய்திகள் மலேசியா
பள்ளிவாசல் அருகே அதிர்ச்சி சம்பவம்: அழுகிய நிலையில் மீட்கப்பட்ட பச்சிளம் குழந்தையின் உடல்
கோலா பிலா:
நெகிரி செம்பிலான் மாநிலத்தின் கோலா பிலா, ரெம்பாங் பானாஸ் பளீவாசலுக்கு அருகிலுள்ள மின்மாற்றி பகுதியில், முழு வளர்ச்சி அடைந்த நிலையில் ஓர் ஆண் குழந்தையின் உடல் கண்டெடுக்கப்பட்டுள்ளது.
நேற்று மாலை 6.30 மணியளவில் அப்பகுதியைச் சேர்ந்த ஒருவர் அளித்த தகவலின் பேரில், கோலா பிலா மாவட்ட காவல்துறையினர், தடயவியல் துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து சோதனையிட்டனர்.
முதற்கட்ட விசாரணையில், கண்டெடுக்கப்பட்ட அந்த ஆண் குழந்தையின் உடலில் தொப்புள்கொடி இன்னும் நீக்கப்படாமல் இருப்பதும், குழந்தை இறந்து இரண்டு நாட்களுக்கு மேல் ஆகியிருக்கலாம் என்பதும் தெரியவந்துள்ளது.
குழந்தையின் உடல் சிதைவடையத் தொடங்கியுள்ள நிலையில், அதன் உடலில் வெளிப்படையான காயங்கள் எதுவும் காணப்படவில்லை. இருப்பினும், குழந்தையின் மரணத்திற்கான உண்மையான காரணம் இன்னும் உறுதி செய்யப்படவில்லை.
இந்தச் சம்பவம் குறித்துக் கருத்துத் தெரிவித்த கோலா பிலா மாவட்டத் துணைப் போலிஸ் கண்காணிப்பாளர் ஷம்ரோல் ஷா ரம்லி, குழந்தையின் அடையாளம் இன்னும் கண்டறியப்படவில்லை என்றும், இது குறித்துக் குற்றவியல் சட்டத்தின் 318-ஆவது பிரிவின் கீழ் விசாரணை தொடங்கப்பட்டுள்ளதாகவும் தெரிவித்தார். குழந்தையின் உடல் பிரேதப் பரிசோதனைக்காகத் துவாங்கு அம்புவான் நஜிஹா மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.
இது தொடர்பாகத் தகவல் தெரிந்த பொதுமக்கள் அல்லது மருத்துவமனை சிகிச்சைப் பதிவுகள் குறித்து ஏதேனும் விவரம் அறிந்தவர்கள் உடனடியாகக் கோலா பிலா மாவட்டக் காவல்துறை தலைமையகத்தை (06-4842999) தொடர்பு கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.
-கிரித்திக்கா
தொடர்புடைய செய்திகள்
March 27, 2026, 12:58 pm
மாற்றுத்திறனாளிப் பெண்ணைச் சீரழித்த எச்.ஐ.வி நோயாளி: பாலியல் வன்கொடுமை வழக்கில் அதிரடித் தீர்ப்பு
March 27, 2026, 12:56 pm
எல்லை மீறிய விபரீதம்: மயானத்தில் அடாவடி செய்த இந்தோனேசியப் பெண்
March 27, 2026, 12:52 pm
உரிமம் இன்றி கார் ஓட்டிய வங்கதேசத்தவர்: காரைப் பறிமுதல் செய்த போக்குவரத்துத் துறை
March 27, 2026, 12:26 pm
மலேசியாவின் 13-வது திட்டத்தில் அணுசக்தி
March 27, 2026, 12:13 pm
தொலைபேசி அழைப்பால் வந்த வினை: பினாங்கில் 4.5 லட்சம் ரிங்கிட்டைப் பறிகொடுத்த பெண் இயக்குநர்
March 27, 2026, 12:11 pm
