நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image

செய்திகள் மலேசியா

By
|
பகிர்

முக்கியமற்ற பணிகளை வீட்டிலிருந்து  தொடர நிறுவனங்கள் அனுமதிக்கலாம்: மலேசிய முதலாளிகள் கூட்டமைப்பு வலியுறுத்து

கோலாலம்பூர்:

எரிபொருள் மானிய சரிசெய்தல் நடவடிக்கைகளுக்கு மத்தியில், எரிபொருள் பயன்பாட்டைக் குறைக்கும் முயற்சிகளின் ஒரு பகுதியாக, முக்கியமற்ற பணிகளுக்கு வீட்டிலிருந்து வேலை செய்ய நிறுவனங்கள் அனுமதிக்க வேண்டும்.

 மலேசிய முதலாளிகள் கூட்டமைப்பின் தலைவர் சையத் ஹுசைன் சையத் ஹஸ்மான் இதனை வலியுறுத்தினார்.

உற்பத்தித்திறன் அல்லது செயல்பாட்டுத் தொடர்ச்சியைப் பாதிக்காத நடைமுறை நடவடிக்கைகளை வணிகங்கள் எடுக்க வேண்டும்.

தனியார் துறையைப் பொறுத்தவரை, சாத்தியமான இடங்களில் முக்கியமற்ற பணிகளுக்கு வீட்டிலிருந்து வேலை ஏற்பாடுகளைச் செய்யலாம்.

அதே வேளையில்  கார் போக்குவரத்து  பகிர்வு முயற்சிகளை ஊக்குவித்தல், பொதுப் போக்குவரத்தின் பரவலான பயன்பாட்டை ஊக்குவித்தல் போன்ற நடவடிக்கைகளை மேற்கொள்ளலாம்.

தேவையற்ற பயணங்களைக் குறைப்பதுடன், குறிப்பாக தளவாடங்கள் மற்றும் வணிகப் பயணம் தொடர்பான செயல்பாட்டு நடைமுறைகளை மறுமதிப்பீடு செய்யுமாறும் சையத் ஹுசைன் முதலாளிகளை வலியுறுத்தினார்.

அதே நேரத்தில், நேரடிப் பயணத்தின் தேவையைக் குறைக்க, இணைய சந்திப்புத் தளங்களின் பயன்பாடு தீவிரப்படுத்தப்பட வேண்டும் என்று அவர் கூறினார்.

முன்னதாக  மத்திய கிழக்கு மோதலின் தாக்கத்தைக் கருத்தில் கொண்டு, தனியார் துறை தற்காலிகமாக  வீட்டில் இருந்து வேலை செய்யும் ஏற்பாடுகளைச் செயல்படுத்த வேண்டும் என்று பிரதமர் டத்தோஶ்ரீ அன்வார் இப்ராஹிம் நேற்று ஊக்குவித்தார்.

- பார்த்திபன் நாகராஜன்

தொடர்புடைய செய்திகள்

Copyright © 2026, நம்பிக்கை செய்திகள்

+ - reset