செய்திகள் மலேசியா
வெப்ப அலை மத்தியில் மாணவர்களின் உடல்நலத்தை உறுதிப்படுத்துமாறு அமைச்சகத்திற்கு மாமன்னர் உத்தரவு
பெட்டாலிங் ஜெயா:
வெப்ப காலத்தில் மாணவர்களின் நலனை உறுதிப்படுத்துமாறு மாமன்னர் சுல்தான் இப்ராஹிம் கல்வி அமைச்சகத்திற்கு உத்தரவிட்டுள்ளார்.
"ஜூன் மாதம் தொடக்கம் அல்லது நடுப்பகுதி வரை நீடிக்கும் என்று எதிர்பார்க்கப்படும் வெப்பமான வானிலையால் மாணவர்களின் உடல்நலம் பாதிக்கப்படாமல் இருப்பதை உறுதிப்படுத்த, இந்த விஷயத்தில் தீவிரமான கவனம் செலுத்துமாறு அமைச்சகத்திற்கு மன்னர் உத்தரவிட்டுள்ளார்" என்று இஸ்தானா நெகாரா அறிக்கை வெளியிட்டிருந்தது.
வெளிப்புற நடவடிக்கைகளைக் குறைத்து போதுமான அளவு தண்ணீர் குடிப்பதன் மூலம் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுக்குமாறு பொதுமக்களுக்கும் சுல்தான் இப்ராஹிம் அறிவுறுத்தினார்.
வானிலையால் அதிக தீ விபத்துக்கள் ஏற்படும் சாத்தியக்கூறுகளுக்கு தயாராக இருக்குமாறும் அவர் தீயணைப்பு, மீட்பு துறையை வலியுறுத்தினார்.
"அதே நேரத்தில், வெப்பமான வானிலை, வலுவான காற்று தீயை விரைவாக பரவச் செய்யும் என்பதால், வெளிப்புற தீ மூட்டுவதை தவிர்க்குமாறு பொதுமக்களுக்கு மன்னர் அறிவுறுத்துகிறார்.
"மருத்துவ சிக்கல்களைத் தடுக்க முதியோர்கள், குழந்தைகள் வெயிலில் வெளியே செல்வதைத் தவிர்க்குமாறு அறிவுறுத்தப்படுகிறார்கள்" என்று அரண்மனை தெரிவித்தது.
கெடா, பெர்லிஸ், பினாங்கு, பேராக், பாஹாங் உட்பட பல மாநிலங்கள் அதிக வெப்பநிலையைச் சந்தித்து வருகின்றன, சில பகுதிகளில் குறைந்தது மூன்று தொடர்ச்சியான நாட்களுக்கு தினசரி அதிகபட்ச வெப்பநிலை 35 முதல் 40 டிகிரி செல்சியஸாக இருக்கிறது.
தற்போதைய வெப்ப காலம் ஜூன் வரை நீடிக்கும் என்று வானிலை துறை தெரிவித்தது, மார்ச் நடுப்பகுதி முதல் ஏப்ரல் நடுப்பகுதிக்கிடையே வெப்பநிலை உச்சத்தைத் தொடும் என்று கணிக்கப்படுகிறது.
வெப்பம் தொடர்பான நோய்களைத் தவிர்க்க வெளிப்புற நடவடிக்கைகளைக் கவனமாக திட்டமிடுமாறு சுகாதார அமைச்சகம் பொதுமக்களை வலியுறுத்தியுள்ளது.
-சங்கீர்த்தனா
தொடர்புடைய செய்திகள்
March 26, 2026, 5:35 pm
தென்கிழக்கு ஆசிய தொடக்கக் கற்றல் ஆய்வு; எழுத்துத் திறனில் மலேசியா முதலிடம்: கல்வியமைச்சு
March 26, 2026, 5:34 pm
புதிய அரச மன்னிப்பு மனுவை டத்தோஶ்ரீ நஜிப் தாக்கல் செய்யவில்லை: ஷாபி
March 26, 2026, 5:34 pm
சீபீல்டு ஆலயம் தொடர்பில் உண்மைக்கு மாறான தகவல்களை வெளியிட வேண்டாம்: பாப்பாராயுடு
March 26, 2026, 5:02 pm
மத்திய கிழக்கு போரால் இந்திய, சீனப் பயணிகள் மலேசியாவுக்கு படையெடுப்பு
March 26, 2026, 4:24 pm
மதீனாவிலிருந்து கோலாலம்பூர் வந்த விமானத்தில் உயிர்நீத்த உம்ரா பயணி
March 26, 2026, 4:15 pm
சுங்கைப்பட்டாணியில் கோரச் சம்பவம்: தலை துண்டிக்கப்பட்ட நிலையில் தம்பதி சடலமாக மீட்பு
March 26, 2026, 4:06 pm
