நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image

செய்திகள் மலேசியா

By
|
பகிர்

மேற்காசிய நெருக்கடியின் தாக்கம் குறித்து பிரபோவோவுடன் கலந்தாலோசிக்க பிரதமர் அன்வர் நாளை ஜகார்த்தா செல்கிறார்

புத்ராஜெயா: 

மேற்காசிய நெருக்கடியைத் தொடர்ந்து கலந்தாலோசிக்க இந்தோனேசியா ஜனாதிபதி பிரபோவோ சுபியாந்தோவின் அழைப்பின் பேரில் பிரதமர் டத்தோ ஸ்ரீ அன்வர் இப்ராஹிம் நாளை ஜகார்த்தா செல்ல திட்டமிடப்பட்டுள்ளார்.

இன்றைய அறிக்கையில் விஸ்மா புத்ரா, மலேசியா, இந்தோனேசியா இரண்டு தலைவர்களும் மேற்காசிய நெருக்கடி, தீவிரமடைந்துவரும் உலகளாவிய பொருளாதார சவால்களை எதிர்கொள்வதில் தங்கள் நிலைப்பாட்டை ஒருங்கிணைப்பார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

"தீவிரமடைந்துவரும் தற்போதைய புவிசார் அரசியல் முன்னேற்றங்களைக் குறிப்பாக மலேசியா, இந்தோனேசியாவிற்கான தாக்கங்கள் உட்பட பிராந்திய நிலைத்தன்மை, உலகளாவிய பொருளாதாரத்தில் நேரடி தாக்கம் ஏற்படுத்தும் மேற்காசிய மோதலைக் கலந்தாலோசிக்க இந்தப் பயணம் நோக்கமாகக் கொண்டுள்ளது.

"இந்தச் சமீபத்திய முன்னேற்றங்கள் இந்தச் சூழ்நிலையை எதிர்கொள்ள நிலைப்பாட்டை ஒருங்கிணைத்து மூலோபாய ஒத்துழைப்பை வலுப்படுத்துவதில் இரண்டு நாடுகளுக்கிடையே முழுமையான, கூர்மையான, ஒருங்கிணைந்த கலந்தாலோசனையை கோருகின்றன" என்று அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அதே நேரத்தில், மக்கள் நலனுக்கு மிகவும் முக்கியமான வர்த்தக வழிகள், உலகளாவிய விநியோகச் சங்கிலிகளின் தொடர்ச்சியை உறுதிப்படுத்துவதுடன் பதற்றங்களைத் தணிக்கவும் இரண்டு தலைவர்களும் இராஜதந்திர முயற்சிகளைத் தீவிரப்படுத்துவார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

பிராந்திய அமைதி, நிலைத்தன்மையைப் பாதுகாக்க கூட்டாகச் செயல்படக்கூடிய ஒன்றிணைந்த, கொள்கை சார்ந்த தொகுதியாக ஆசியான் பங்கை வலுப்படுத்துவதின் முக்கியத்துவத்தையும் இந்தச் சந்திப்பு வலியுறுத்தும்.

உலகளாவிய நிச்சயமற்ற சூழலில் உறுப்பு நாடுகளின் பொருளாதார எதிர்ப்புத்திறனை உறுதிப்படுத்துவதற்கு இந்த நடவடிக்கை முக்கியமானதாக கருதப்படுகிறது.

-சங்கீர்த்தனா 

தொடர்புடைய செய்திகள்

Copyright © 2026, நம்பிக்கை செய்திகள்

+ - reset