நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image

செய்திகள் மலேசியா

By
|
பகிர்

சீபீல்டு ஆலயம் தொடர்பில் உண்மைக்கு மாறான தகவல்களை வெளியிட வேண்டாம்: பாப்பாராயுடு

ஷாஆலாம்:

சீபீல்டு ஶ்ரீ மகா மாரியம்மன் ஆலயம் தொடர்பில் உண்மைக்கு மாறான தகவல்களையோ வெளியிட வேண்டாம்.

சிலாங்கூர் மாநில ஆட்சிக் குழு உறுப்பினர் பாப்பாராயுடு இதனை வலியுறுத்தினார்.

ஆட்சிக்குழு உறுப்பினர், லிமாஸ் இணைத் தலைவர் என்ற முறையில் அண்மைக் காலமாகப் பேசப்பட்டு வரும் சீபீல்டு ஸ்ரீ மகா மாரியம்மன் ஆலய விவகாரம் குறித்துச் சில விளக்கங்களை அளிக்க விரும்புகிறேன்.

இவ்வாலயம் தொடர்பாக, இதற்கு முன் எழுந்த பெரும்பாலான சிக்கல்கள், தற்போது இறுதிக்கட்டத் தீர்வை எட்டியுள்ளன.

இதை அனைத்துத் தரப்பினரும் கவனத்தில் எடுத்துக் கொள்ள வேண்டும்.

எனவே, தற்போது சுமூகமாக நடைபெற்று வரும் இந்தச் செயல்முறையைப் பாதிக்கும் வகையில், மூன்றாம் தரப்பினரோ அல்லது பொதுமக்களோ எவ்விதமான ஊகங்களையோ அல்லது உண்மைக்கு மாறான தகவல்களையோ வெளியிட வேண்டாம்.

இது குறித்த மேலதிக விவரங்கள் தேவைப்படும் எவருக்கும் விளக்கம் அளிக்க நான் எப்போதும் தயாராகவே இருக்கிறேன்.

இருப்பினும், இவ்விவகாரம் தற்போது சிலாங்கூர் மாநில அரசால் அதிகாரப்பூர்வமாக முடிவு செய்யப்படுவதற்கான இறுதி நிலையில் உள்ளது என்பதைத் தெளிவுபடுத்துகிறேன்.

தற்போதைய நிலையில், ஸ்ரீ மகா மாரியம்மன் ஆலயத்தின் நிலப்பகுதி, சட்டப்பூர்வமாக ஆலய நோக்கத்திற்காகவே ஒதுக்கப்பட்டுள்ளது என்பதை நான் உறுதிப்படுத்துகிறேன்.

எனவே, இதற்கு முரணான எந்தவொரு வதந்தியையும் பரப்ப வேண்டாம் என அனைவரையும் கேட்டுக்கொள்கிறேன் என பாப்பாராயுடு கூறினார்.

- பார்த்திபன் நாகராஜன்

தொடர்புடைய செய்திகள்

Copyright © 2026, நம்பிக்கை செய்திகள்

+ - reset