நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image

செய்திகள் மலேசியா

By
|
பகிர்

புதிய அரச மன்னிப்பு மனுவை டத்தோஶ்ரீ நஜிப் தாக்கல் செய்யவில்லை: ஷாபி 

கோலாலம்பூர்:

முன்னாள் பிரதமர் டத்தோஶ்ரீ நஜிப் ரசாக், அரச மன்னிப்பு வாரியத்திடம் புதிய மன்னிப்பு மனு தாக்கல் செய்யவில்லை.

இவ்வாறு கூறப்படுவதை மூத்த வழக்கறிஞர் டான்ஶ்ரீ ஷாபி அப்துல்லா மறுத்துள்ளார்.

தற்போது காஜாங் சிறையில் தண்டனை அனுபவித்து வரும் அந்த அரசியல்வாதியால் எந்தப் புதிய மனுவும் தாக்கல் செய்யப்படவில்லை என்பதைத் தன்னால் உறுதிப்படுத்த முடியும்.

நஜிப்பைத் தவிர, ஏதேனும் மனு உள்ளதா இல்லையா என்பதை அறியும் முதல் நபர் நானாகத் தான் இருப்பேன்.

முன்னதாக, ரமலான் மாதத்தில் நஜிப் ஒரு புதிய மன்னிப்பு மனுவைத் தாக்கல் செய்ததாகவும், அந்த மனுவின் நகல் இஸ்தானா நெகாராவுக்கு அனுப்பப்பட்டதாக செய்தி வெளியிடப்பட்டிருந்தது.

- பார்த்திபன் நாகராஜன்

தொடர்புடைய செய்திகள்

Copyright © 2026, நம்பிக்கை செய்திகள்

+ - reset