செய்திகள் மலேசியா
தென்கிழக்கு ஆசிய தொடக்கக் கற்றல் ஆய்வு; எழுத்துத் திறனில் மலேசியா முதலிடம்: கல்வியமைச்சு
புத்ராஜெயா:
தென்கிழக்கு ஆசிய தொடக்கக் கற்றல் ஆய்வில் எழுத்துத் திறனில் மலேசியா சிறந்த சாதனையைப் பதிவுசெய்து, தென்கிழக்கு ஆசியாவில் முதலிடம் பிடித்துள்ளது.
கம்போடியாவின் புனோம் பென்னில் அறிவிக்கப்பட்ட முடிவுகளின்படி, எழுத்துத் திறனில் மாணவர்களின் சராசரி மதிப்பெண் 480.1 புள்ளிகளாக இருந்தது.
இதுவட்டாரத்தில் சராசரியை விட 29.2 புள்ளிகள் அதிகம் என்றும் கல்வியமைச்சு ஓர் அறிக்கையில் தெரிவித்துள்ளது.
அதன்படி, வட்டாரத்தில் சராசரியான 5%-ஐ விட, மலேசிய மாணவர்களில் 21% பேர் மிக உயர்ந்த சாதனைப் பிரிவான பேண்ட் 5, அதற்கு மேற்பட்ட பிரிவுகளில் இருந்தனர்.
இந்தச் சாதனை, உள்ளடக்கம், சூழல், கருத்துக்களை எழுத்து வடிவில் முன்வைக்கும் செயல்முறை ஆகியவற்றை உள்ளடக்கிய மாணவர்களின் திறனாய்வுச் சிந்தனையின் அளவைக் காட்டுகிறது.
இருப்பினும், சமூக பொருளாதாரக் குழுக்கள், பாலினம், வீட்டிலும் பள்ளியிலும் பேசப்படும் மொழியில் உள்ள வேறுபாடுகள் ஆகியவற்றுக்கு இடையேயான அடைவு இடைவெளி இன்னும் நிலவுகிறது.
இது மேலும் சமத்துவமான கல்வியை உறுதி செய்வதில் ஒரு பெரிய சவாலாக உள்ளது என அந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.
- பார்த்திபன் நாகராஜன்
தொடர்புடைய செய்திகள்
March 26, 2026, 6:56 pm
பூடி 95 திட்டத்தின் கீழ் ரோன் 95 பெட்ரோல் அளவு 200 லிட்டராக குறைக்கப்படும்: பிரதமர்
March 26, 2026, 5:34 pm
புதிய அரச மன்னிப்பு மனுவை டத்தோஶ்ரீ நஜிப் தாக்கல் செய்யவில்லை: ஷாபி
March 26, 2026, 5:34 pm
சீபீல்டு ஆலயம் தொடர்பில் உண்மைக்கு மாறான தகவல்களை வெளியிட வேண்டாம்: பாப்பாராயுடு
March 26, 2026, 5:02 pm
மத்திய கிழக்கு போரால் இந்திய, சீனப் பயணிகள் மலேசியாவுக்கு படையெடுப்பு
March 26, 2026, 4:24 pm
மதீனாவிலிருந்து கோலாலம்பூர் வந்த விமானத்தில் உயிர்நீத்த உம்ரா பயணி
March 26, 2026, 4:15 pm
