செய்திகள் மலேசியா
அடையாள ஆவணங்கள் இல்லாத சமூகத்திற்கு உதவ டிரா மலேசியாவின் ஐந்து முன்மொழிவுகளை மத்திய அரசு பரிசீலிக்க வேண்டும்: சிலாங்கூர் சபாநாயகர்
பெட்டாலிங்ஜெயா:
அடையாள ஆவணங்கள் இல்லாத சமூகத்திற்கு உதவுவதற்காக டிரா மலேசியாவின் ஐந்து முன்மொழிவுகளை மத்திய அரசு பரிசீலிக்க வேண்டும்.
சிலாங்கூர் மாநில சட்டமன்ற சபாநாயகர் லோவ் வெங் சான் இதனை வலியுறுத்தினார்.
சட்ட ஓட்டைகளை அடைப்பதற்கும் குறைந்தபட்சம் ஒரு மலேசியரை தந்தை அல்லது தாயாக கொண்டவர்களின் அடையாள ஆவணப் பிரச்சினைகளுக்கு தீர்வு காணப்பட வேண்டும்.
இதன் அடிப்படையில் டிரா மலேசியாவின் முன்மொழிவுகளை சிலாங்கூர் மாநில சட்டமன்றத்திற்குக் கொண்டுவந்தால், அச்சமூகத்திற்கு எவ்வாறு உதவலாம் என்பது குறித்தும் சிலாங்கூர் மாநில அரசு பரிசீலிக்கலாம்.
அதே வேளையில் மத்திய அரசு, இதைத் தீவிரமாகப் பரிசீலிக்க வேண்டும் என்று நான் நினைக்கிறேன்.
மேலும், அவர்கள் இதை மத்திய அரசிடம் அதிகாரப்பூர்வமாக முன்மொழிந்திருந்தால், நாடாளுமன்றத்தில் இந்தப் பிரச்சினைகளை எழுப்பும் நாடாளுமன்ற உறுப்பினர்கள் இருப்பார்கள் என்று நான் நம்புகிறேன்.
அதற்குப் பிறகு அரசாங்கம் இந்த முன்மொழிவுகள் குறித்து ஒரு பதிலை அளிக்க வேண்டும்.
டிரா மலேசியாவின் 20ஆவது ஆண்டு விழாவை முன்னிட்டு நடைபெற்ற நிதி திரட்டும் இரவு விருந்தில் கலந்துகொண்ட பிறகு நேற்று செய்தியாளர்களிடம் அவர் கூறினார்.
இந்த நேரத்தில் மத்திய அரசால் அனைத்து முன்மொழிவுகளையும் செயல்படுத்த முடியாமல் போகலாம் என்பதை நான் ஒப்புக் கொள்கிறேன்.
ஆனால் குறைந்தபட்சம் இந்த முன்மொழிவுகளைப் படித்து ஒரு விரிவான பதிலை அளிக்க வேண்டும்.
நாங்கள் விரும்புவது என்னவென்றால், அரசாங்கம் எல்லாவற்றையும் மூடி மறைக்கக் கூடாது.
இது கடந்த காலத்தில் மிக மிக அடிக்கடி நடந்த ஒரு விஷயம். தற்போதைய அரசாங்கத்தில் இது போன்ற செயல்கள் நடக்கும் என்று நாங்கள் நினைக்கவில்லை.
நாம் இது குறித்து பரந்த மனப்பான்மையுடன் இருக்க வேண்டும். இதற்குத் தீவிரமான பரிசீலனை அளிக்கப்படலாம் என்று அவர் கூறினார்.
- பார்த்திபன் நாகராஜன்
தொடர்புடைய செய்திகள்
March 26, 2026, 4:15 pm
சுங்கைப்பட்டாணியில் கோரச் சம்பவம்: தலை துண்டிக்கப்பட்ட நிலையில் தம்பதி சடலமாக மீட்பு
March 26, 2026, 4:06 pm
9.5 மில்லியன் ரிங்கிட் சேவைக் கட்டணம் மட்டுமே; வழக்கிற்கான தீர்வு அல்ல: விக்டர் சின்
March 26, 2026, 3:53 pm
வெப்ப அலை மத்தியில் மாணவர்களின் உடல்நலத்தை உறுதிப்படுத்துமாறு அமைச்சகத்திற்கு மாமன்னர் உத்தரவு
March 26, 2026, 3:52 pm
ஆக்ஸ்போர்டு ஆங்கில அகராதியில் மலேசிய, சிங்கப்பூர் வார்த்தைகள் சேர்க்கப்பட்டன
March 26, 2026, 2:30 pm
புதிய அரச மன்னிப்பு மனுவை டத்தோஸ்ரீ நஜிப் தாக்கல் செய்துள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது
March 26, 2026, 12:38 pm
கெஅடிலான் நாடாளுமன்ற உறுப்பினரின் ஈடுபாட்டிற்கு விக்டர் சின்னிடம் ஆதாரம் இருக்கலாம்: ரபிசி நம்பிக்கை
March 26, 2026, 12:37 pm
பாதுகாப்பு பணம் கேட்டதாகக் கூறும் காணொலி குறித்து போலிசில் புகார் அளிக்க ஹன்னா இயோ உத்தரவு
March 26, 2026, 12:23 pm
நபி முஹம்மது (ஸல்) அவர்களை இழிவுபடுத்தியதாகச் சந்தேகிக்கப்படும் ஆடவரை போலீஸ் கைது செய்தது
March 26, 2026, 12:16 pm
