செய்திகள் மலேசியா
சுங்கைப்பட்டாணியில் கோரச் சம்பவம்: தலை துண்டிக்கப்பட்ட நிலையில் தம்பதி சடலமாக மீட்பு
சுங்கைப்பட்டாணி:
கெடா மாநிலம், மெர்போக் பகுதியில் உள்ள கம்போங் பெலாவ் கிராமத்தில், ஒரே குடும்பத்தைச் சேர்ந்த கணவன், மனைவி, அவர்களின் மகன் என மூவர் மிகக் கொடூரமான முறையில் கொலை செய்யப்பட்டுள்ளனர்.
65 வயதான ஜிக்ரி அப்துல் ரஹ்மான், அவரது 53 வயது மனைவி சுராயா மான் ஆகியோரின் சடலங்கள், தலை துண்டிக்கப்பட்ட நிலையில் சிதைக்கப்பட்டு, வீட்டின் சமையலறையில் தரைவிரிப்புகளால் சுற்றப்பட்டுக் கண்டெடுக்கப்பட்டன. இவர்களின் 29 வயது மகனான முஹம்மத் ஷகிர் ஜுஃபைரியின் சடலம், கழுத்து அறுக்கப்பட்ட நிலையில் வீட்டின் மேல் தளத்தில் உள்ள அறையில் மீட்கப்பட்டது.
கடந்த மூன்று நாட்களாக அந்த வீட்டிலிருந்து யாரும் வெளியே வராததாலும், அங்கிருந்து வீசிய துர்நாற்றத்தாலும் சந்தேகமடைந்த பொதுமக்கள், நள்ளிரவு 12.30 மணியளவில் காவல்துறைக்குத் தகவல் அளித்துள்ளனர். சம்பவ இடத்திற்கு விரைந்த கோலா மூடா மாவட்ட காவல்துறைத் தலைவர் அசிஸ்டென்ட் கமிஷனர் ஹன்யான் ரம்லான் தலைமையிலான குழுவினர், உட்புறமாகப் பூட்டப்பட்டிருந்த கதவை உடைத்து உள்ளே சென்றபோது இந்த அதிர்ச்சிகரமான கொலைகள் வெளிச்சத்திற்கு வந்தன.
முதற்கட்ட விசாரணையில், வீட்டின் வரவேற்பு அறையில் ரத்தக் கறைகள் சிதறிக் கிடந்ததும், கொலையாளி சாட்சியங்களை மறைப்பதற்காக அந்த இடத்தைச் சுத்தம் செய்ய முயன்றதும் தெரியவந்துள்ளது. சடலங்கள் சிதைக்கப்பட்டு, ஆடைகள் போர்வைகளால் மூடப்பட்டிருந்த விதம், மிகவும் வன்மத்துடன் செய்யப்பட்ட திட்டமிட்ட கொலையாக இருக்கலாம் என்ற சந்தேகத்தை எழுப்பியுள்ளது.
இச்சம்பவம் குறித்து விரிவான விசாரணையைத் தொடங்கியுள்ள காவல்துறையினர், கொலையாளியைத் தீவிரமாகத் தேடி வருகின்றனர். ஒரு அமைதியான கிராமப் பகுதியில் நிகழ்ந்துள்ள இந்தத் துயரச் சம்பவம் அப்பகுதி மக்களிடையே பெரும் பீதியையும் சோகத்தையும் ஏற்படுத்தியுள்ளது.
-கிரித்திக்கா
தொடர்புடைய செய்திகள்
March 26, 2026, 5:35 pm
தென்கிழக்கு ஆசிய தொடக்கக் கற்றல் ஆய்வு; எழுத்துத் திறனில் மலேசியா முதலிடம்: கல்வியமைச்சு
March 26, 2026, 5:34 pm
புதிய அரச மன்னிப்பு மனுவை டத்தோஶ்ரீ நஜிப் தாக்கல் செய்யவில்லை: ஷாபி
March 26, 2026, 5:34 pm
சீபீல்டு ஆலயம் தொடர்பில் உண்மைக்கு மாறான தகவல்களை வெளியிட வேண்டாம்: பாப்பாராயுடு
March 26, 2026, 5:02 pm
மத்திய கிழக்கு போரால் இந்திய, சீனப் பயணிகள் மலேசியாவுக்கு படையெடுப்பு
March 26, 2026, 4:24 pm
மதீனாவிலிருந்து கோலாலம்பூர் வந்த விமானத்தில் உயிர்நீத்த உம்ரா பயணி
March 26, 2026, 4:06 pm
