செய்திகள் மலேசியா
9.5 மில்லியன் ரிங்கிட் சேவைக் கட்டணம் மட்டுமே; வழக்கிற்கான தீர்வு அல்ல: விக்டர் சின்
கோலாலம்பூர்:
கெஅடிலான் நாடாளுமன்ற உறுப்பினர் ஒருவருக்கு வழங்கப்பட்டதாகக் கூறப்படும் 9.5 மில்லியன் ரிங்கிட் அமலாக்க இலாக்களுடனான எந்தவொரு வழக்கையும் தீர்த்து வைக்கும் நோக்கத்தில் வழங்கப்பட்டதல்ல.
மாறாக, அது ஒரு சேவைக் கட்டணம் மட்டுமே என்று தொழிலதிபர் விக்டர் சின் தெளிவுபடுத்தியுள்ளார்.
பல மில்லியன் ரிங்கிட் பணம் தனக்கு எதிரான முறைகேடு குற்றச்சாட்டுகளை மூடிமறைப்பதற்காக செலுத்தப்படவில்லை.
மாறாக பெருநிறுவன மாபியா உறுப்பினர்களின் கடுமையான அழுத்தத்தின் காரணமாகவே அது செலுத்தப்பட்டது.
இந்தப் பணம் எந்தவொரு அமலாக்க நிறுவனத்திற்கும் உதவி செய்வதற்காகவோ, எந்தவொரு விசாரணையையும் மூடிமறைப்பதற்காகவோ அல்லது எனக்கு எதிரான முறைகேடு குற்றச்சாட்டுகளைத் தீர்ப்பதற்காகவோ செலுத்தப்படவில்லை.
என்னுடன் தொடர்புடையவர்கள் என்று நம்பப்படும் நபர்கள் மீதான விரோதப் போக்கைத் தடுப்பதற்காக, தீவிரமான சூழ்நிலைகளில் விதிக்கப்பட்ட ஒரு சேவைக் கட்டணம் தான் அது என்று அவர் கூறினார்.
-பார்த்திபன் நாகராஜன்
தொடர்புடைய செய்திகள்
March 26, 2026, 3:53 pm
வெப்ப அலை மத்தியில் மாணவர்களின் உடல்நலத்தை உறுதிப்படுத்துமாறு அமைச்சகத்திற்கு மாமன்னர் உத்தரவு
March 26, 2026, 3:52 pm
ஆக்ஸ்போர்டு ஆங்கில அகராதியில் மலேசிய, சிங்கப்பூர் வார்த்தைகள் சேர்க்கப்பட்டன
March 26, 2026, 2:30 pm
புதிய அரச மன்னிப்பு மனுவை டத்தோஸ்ரீ நஜிப் தாக்கல் செய்துள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது
March 26, 2026, 12:38 pm
கெஅடிலான் நாடாளுமன்ற உறுப்பினரின் ஈடுபாட்டிற்கு விக்டர் சின்னிடம் ஆதாரம் இருக்கலாம்: ரபிசி நம்பிக்கை
March 26, 2026, 12:37 pm
பாதுகாப்பு பணம் கேட்டதாகக் கூறும் காணொலி குறித்து போலிசில் புகார் அளிக்க ஹன்னா இயோ உத்தரவு
March 26, 2026, 12:23 pm
நபி முஹம்மது (ஸல்) அவர்களை இழிவுபடுத்தியதாகச் சந்தேகிக்கப்படும் ஆடவரை போலீஸ் கைது செய்தது
March 26, 2026, 12:16 pm
டீசல் விலை உயர்வு: லங்காவி படகுச் சேவைகள் அதிரடியாகக் குறைப்பு
March 26, 2026, 12:14 pm
