நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image

செய்திகள் மலேசியா

By
|
பகிர்

ஆக்ஸ்போர்டு ஆங்கில அகராதியில் மலேசிய, சிங்கப்பூர் வார்த்தைகள் சேர்க்கப்பட்டன

கோலாலம்பூர்: 

ஆக்ஸ்போர்டு ஆங்கில அகராதி தனது சமீபத்திய புதுப்பிப்பில் மலாய் மொழி, மின்னான் (ஹோக்கியன்) வட்டார வழக்கிலிருந்து தோன்றிய பல மலேசிய ஆங்கில வார்த்தைகளைச் சேர்த்துள்ளது. 

அகராதி வெளியீட்டாளரான ஆக்ஸ்போர்டு லாங்குவேஜஸ் வெளியிட்ட அறிக்கையின்படி, இந்தப் புதுப்பிப்பில் சிங்கப்பூர் அல்லது மலேசிய ஆங்கிலத்திலிருந்து 11 புதிய வார்த்தைகள் சேர்க்கப்பட்டுள்ளன. இது உலக ஆங்கிலத்தில் இந்தப் பிராந்தியத்தின் மொழியியல் செல்வாக்கை எடுத்துக்காட்டுகிறது.

புதிய சேர்க்கைகளில் "agak-agak" என்ற வார்த்தை பெயர்ச்சொல், வினைச்சொல் இரண்டாகவும் இடம்பெற்றுள்ளது. இது தோராயம் அல்லது மதிப்பீடு என்ற பொருளில், பெரும்பாலும் சமையல் முறையின் சூழலில் பயன்படுத்தப்படுகிறது.

தொடர்ந்து, ஒரு செயலை வெற்றிகரமாக செய்வதற்கான சக்தி, திறன் அல்லது ஆற்றல் இருப்பதை குறிக்கும் வினைச்சொல்லான "boleh" என்ற வார்த்தையும் சேர்க்கப்பட்டுள்ளது. 

இந்தப் புதுப்பிப்பில் ஹோக்கியனில் "jialat" என்ற வார்த்தையும் சேர்க்கப்பட்டுள்ளது. இது கடினமான அல்லது மோசமான சூழ்நிலையை விவரிக்கப் பயன்படுகிறது.

மற்றொரு ஹோக்கியன் கடன் வார்த்தையான "kaypoh" பெயர்ச்சொல், உரிச்சொல் அல்லது வினைச்சொல் என மூன்று வகையிலும் பயன்படும் வகையில் சேர்க்கப்பட்டுள்ளது,. இது அதிக ஆர்வம் காட்டி தலையிடும் நபரை குறிக்கிறது.

மலேசியா, சிங்கப்பூர், பிலிப்பைன்ஸ், தென் ஆப்பிரிக்கா,  அயர்லாந்திலிருந்தான புதுப்பிப்புகள் குறித்த மேலும் விவரங்களை வாசகர்கள் ஆக்ஸ்போர்டு லாங்குவேஜஸின் உலக ஆங்கில வெளியீட்டு குறிப்புகளில் காணலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

-சங்கீர்த்தனா 

தொடர்புடைய செய்திகள்

Copyright © 2026, நம்பிக்கை செய்திகள்

+ - reset