செய்திகள் வணிகம்
30 ரிங்கிட் முதலீட்டில் RM40 மில்லியன் சொத்து சேர்த்த முன்னாள் ஹாக்கி கேப்டன்
கோலாலம்பூர்:
வெறும் 30 ரிங்கிட் முதலீட்டில் சிற்றுண்டி விற்பனை செய்யத் தொடங்கிய தேசிய இளைஞர் ஹாக்கி அணியின் முன்னாள் கேப்டன் முஹம்மத் ஹசிக் சம்சுல், இன்று RM40 மில்லியன் ரிங்கிட் மதிப்பிலான வணிக சாம்ராஜ்யத்திற்கு அதிபதியாக உருவெடுத்துள்ளார்.
விளையாட்டுத் துறையில் 2013-ஆம் ஆண்டு உலகக்கோப்பை, 2014-ஆம் ஆண்டு காமன்வெல்த் போட்டிகளில் மலேசியாவைப் பிரதிநிதித்துவப்படுத்திய இவர், தற்போது 'பாட்டல் கேரேஜ் எம்பயர்' (Bottol Garage Empire) எனும் மோட்டார் வாகன உதிரிபாகங்கள், பழுதுபார்க்கும் வணிகத்தில் பெரும் வெற்றி கண்டுள்ளார்.
தனது பள்ளிப் பருவத்திலிருந்தே சிறு சிறு வணிகங்களில் ஈடுபட்டு வந்த ஹசிக், சலூன் கடை, பழைய ஆடை விற்பனை எனப் பல முயற்சிகளில் தோல்விகளைச் சந்தித்தார்.
இருப்பினும், விடாமுயற்சியுடன் 2020-ஆம் ஆண்டு கோவிட் பெருந்தொற்று காலத்தில் தொடங்கிய மோட்டார் வாகன வணிகம் அவருக்குப் பெரும் திருப்புமுனையாக அமைந்தது.
இன்று நாடு முழுவதும் 9 கிளைகளுடன் இயங்கும் இவரது நிறுவனத்தில் 120 ஊழியர்கள் பணிபுரிகின்றனர். மாதம் சராசரியாக RM3 மில்லியன் ரிங்கிட் வருவாய் ஈட்டும் இவரது வணிகத்தின் தற்போதைய மதிப்பு RM40 மில்லியன் ரிங்கிட் ஆகும்.
தனது 32 வயதிலேயே இத்தகைய சாதனையைப் படைத்துள்ள ஹசிக், விளையாட்டைப் போலவே வணிகத்திலும் தீவிர கவனம் செலுத்துவதே தனது வெற்றியின் ரகசியம் என்கிறார். புதிய கிளைகளைத் தொடங்குவதை விட, தற்போதுள்ள கிளைகளில் வாடிக்கையாளர்களுக்குச் சிறந்த சேவையை வழங்குவதே தனது எதிர்காலத் திட்டம் என அவர் குறிப்பிட்டுள்ளார். மற்றவர்களுக்கு வேலைவாய்ப்பை வழங்குவதை இறைவனின் அருளாகக் கருதும் இவர், ஒரு தொழிலதிபராகத் தோல்வியடைந்தால் அதற்குத் தாமே பொறுப்பேற்க வேண்டும் என்பதில் உறுதியாக இருக்கிறார்.
தங்களின் ஆர்வம் எது என்பதை முன்கூட்டியே கண்டறிந்து, அதற்கேற்ப பயிற்சிகளை மேற்கொள்வது பிற்கால வாழ்க்கைக்குப் பெரும் உதவியாக இருக்கும் என அவர் தனது அனுபவத்தின் மூலம் அறிவுறுத்தியுள்ளார்.
-கிரித்திக்கா
தொடர்புடைய செய்திகள்
October 5, 2026, 10:07 pm
டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு தொடர்ந்து சரிவு
October 5, 2026, 3:40 pm
சீரகத் தூளில் பூச்சிக்கொல்லி மருந்து: உடனடியாக அகற்ற இந்திய அரசு உத்தரவு
September 26, 2026, 12:30 pm
வட அமெரிக்காவில் மேலும் 250 கடைகளை மூடும் Starbucks
September 11, 2026, 4:22 pm
ஃபேன்சி அகாடாமி அணிச்சல், பேக்கரி துறையில் திறமையான சாதனையாளர்களை உருவாக்கும்: விக்னேஸ்வரி நம்பிக்கை
September 11, 2026, 3:07 pm
இந்தியாவில் iPhone விலை 41% வரை அதிகரிப்பு
September 6, 2026, 5:39 pm
சிங்கப்பூரில் curry puff வாங்க சீனாவிலிருந்து வந்த விநியோக ஊழியர்
September 2, 2026, 4:36 pm
இந்தியாவின் முன்னணி பெருங்காய நிறுவனங்களான எல்ஜி, எவரெஸ்ட் நிறுவனப் பெருங்காயங்கள் விற்பனைக்கு தடை
August 31, 2026, 8:14 pm
சிங்கப்பூரில் உத்தரவாதமில்லாக் கடன் பெறுவோர் - மறுபரிசீலனை செய்ய 3 நாள் அவகாசம்
August 30, 2026, 9:46 pm
கே8 சரக்குகளைக் கையாள்வது குறித்து அரசும், ஏஜென்சிகளும் தெளிவுபடுத்த வேண்டும்
August 26, 2026, 11:58 am
