நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image

செய்திகள் மலேசியா

By
|
பகிர்

துரோகிகளுடன் கைகுலுக்குவது எனது நோக்கம் அல்ல; ஆலய சர்ச்சைகளுக்கு தீர்வு காண்பதே எனது நோக்கம்: உமா காந்தன்

கோலாலம்பூர்:

ஆலய சர்ச்சைகளுக்கு உண்மையான காரணங்களை கண்டறியவே சமாதான கூட்டத்தில் பங்கேற்றேன்.

புரட்சி இயக்கத்தின் தலைவர் உமா காந்தன் இதனை கூறினார்.

நாட்டில் ஆலயம் தொடர்பான சர்ச்சைகள் பரவலாக நடந்தது.

இதற்கு தீர்வு காண வேண்டும் அடிப்படையில் தான்  புத்ராஜெயாவில் ஒரு சமாதான கூட்டம் நடைபெற்றது. இக்கூட்டத்தில் நான் கலந்து கொண்டேன்.

உடனே நான் ஆலயங்கள் உடைத்ததற்கு காரணமானவர்களுடன் கைகுலுக்கி விட்டோம்.

அவர்களுடன் சாப்பிட்டோம் என பல குற்றச்சாட்டுகள்கள் எழுந்துள்ளது. ஆனால் அதில் உள்ள உண்மைகள் யாருக்கும் தெரியாது.

முதலில் இக்கூட்டம் போலிஸ் அதிகாரிகளால் ஏற்பாடு செய்யப்பட்டது.

அதன் வேளையில் ஆலய சர்ச்சைகளுக்கு உண்மையிலேயே என்ன காரணம் என்பதை தெரிந்து கொள்வதற்காக தான் இக்கூட்டத்தில் நான் கலந்து கொண்டன்.

அக்கூட்டத்தில் யாரும் சமாதானமாக பேசவில்லை. எங்களின் ஆதங்களையும் நாங்கள் வெளிப்படுத்தினோம்.

குறிப்பாக ஜம்ரி வினோத், செக்கு சந்திரா உட்பட பலர் பேசுவதும் செய்வதும் இந்துக்களை பாதிக்கிறது என்பதை எடுத்துக் கூறவே நான் அங்கு சென்றேன்.

ஆகையால் சமூக ஊடங்களில் பொய்யான தவறுகளை பரப்ப வேண்டாம்.

உண்மை என்னவென்று தெரியாமல் பேச வேண்டாம் என்று உமாகாந்தன் செய்தியாளர்களிடம் கூறினார்.

- பார்த்திபன் நாகராஜன்











தொடர்புடைய செய்திகள்

Copyright © 2026, நம்பிக்கை செய்திகள்

+ - reset