நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image

செய்திகள் மலேசியா

By
|
பகிர்

நான் இன்னும் கேசியோ கைக்கடிகாரம் தான் அணிந்திருக்கிறேன்: ஃபஹ்மி

கோலாலம்பூர்:

பெருநிறுவன மாபியா ஊழல் வழக்கில் தொழிலதிபர் விக்டர் சின்னிடம் இருந்து 10 மில்லியன் ரிங்கிட் ரொக்கமாகக் கேட்கப்பட்டதாகக் கூறப்படும் கெஅடிலான் நாடாளுமன்ற உறுப்பினர் தான் இல்லை.

தகவல் தொடர்புத் துறை அமைச்சர் டத்தோ ஃபஹ்மி ஃபட்சில் இதனை  திட்டவட்டமாகத் தெரிவித்தார்.

எனது கையில் இன்னும் கேசியோ கைக்கடிகாரம் அணிந்திருப்பதைக் காட்டியவாறே, அந்தக் குற்றச்சாட்டை நக்கலாக அவர்  நிராகரித்தார்.

நிச்சயமாக அது நான் இல்லை. நான் இன்னும் கேசியோ கைக்கடிகாரம்தான் அணிந்திருக்கிறேன்.  என்னிடம் எந்தத் தகவலும் இல்லை.

ஒரு பெருநிறுவன மாபியா ஊழலில் சிக்கியிருந்த விக்டரின் கூற்றுக்கு பதிலளிக்கும் விதமாக அவர் இவ்வாறு கூறினார்.

முன்னதாக அந்த ஊழலைத் தீர்ப்பதற்காக ஒரு கெஅடிலான் நாடாளுமன்ற உறுப்பினர் தன்னிடம் 10 மில்லியன் ரிங்கிட் ரொக்கமாகக் கேட்டதாக விக்டர் சின் கூறியிருந்தார்.

ஆரம்பக் கட்டத்தில் தாம் 9.5 மில்லியன் ரிங்கிட் மட்டுமே வழங்கியதாகவும், பிரச்சினை தீர்க்கப்படாததால் மீதமுள்ள 500,000 ரிங்கிட் நாடாளுமன்ற உறுப்பினரிடம் ஒப்படைக்கப்படவில்லை என்றும் விக்டர் கூறினார் என்பது குறிப்பிடத்தக்கது.

- பார்த்திபன் நாகராஜன்

தொடர்புடைய செய்திகள்

Copyright © 2026, நம்பிக்கை செய்திகள்

+ - reset