நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image

செய்திகள் மலேசியா

By
|
பகிர்

பெருநிறுவன மாபியா விவகாரம்; சட்ட அமலாக்க அமைப்பில் சதி உள்ளது: ரபிசி

கோலாலம்பூர்:

கெஅடிலான்  நாடாளுமன்ற உறுப்பினருடன் தொடர்புடைய 9.5 மில்லியன் ரிங்கிட் விவகாரம், சட்ட அமலாக்க அமைப்பே ஒரு சதியில் ஈடுபட்டுள்ளதாகக் கூறப்படும் ஒரு தீவிரமான கட்டத்தைக் குறிக்கக்கூடும்.

முன்னாள் கெஅடிலான் துணைத் தலைவர் டத்தோஶ்ரீ ரபிசி ரம்லி இந்த கவலை தெரிவித்தார்.

தனது சமீபத்திய எதிர்வினையில், அதிகாரிகள் இந்தச் செயல்பாடுகளை அறிந்திருப்பது மட்டுமல்லாமல், குற்றவாளிகளுக்கு வசதி செய்து கொடுப்பதாகக் கூறப்படும் நடவடிக்கைகளையும் எடுக்கும்போது நிலைமை ஆபத்தானதாக மாறியுள்ளது.

இந்த நிலையில், இது இனி கண்டுகொள்ளாமல் விடும் விஷயமல்ல. இது சதித்திட்டம் என்ற நிலையை எட்டியுள்ளது.

அதனால்தான், விசாரணை தன்னை மட்டும் மையமாகக் கொண்டிருக்கக் கூடாது.

அம்லா எனும் பணமோசடி தடுப்புச் சட்டத்தை பயன்படுத்தி அழுத்தம் கொடுப்பதாகக் கூறப்படும் நபர்கள் உட்பட மற்ற தரப்பினரையும் இதில் ஈடுபடுத்த வேண்டும் என்றும் விக்டர் சின் கூறியபோது, ​​இந்த விஷயத்தை சாதாரணமாக எடுத்துக்கொள்ள முடியாது என்று அவர் இன்று முகநூலில் கூறினார்.

- பார்த்திபன் நாகராஜன்

தொடர்புடைய செய்திகள்

Copyright © 2026, நம்பிக்கை செய்திகள்

+ - reset