செய்திகள் மலேசியா
தேசியக் கூட்டணியில் தலைமைத்துவ மாற்றம்; மஇகா இப்போதைக்கு தொடர்ந்து தேசிய முன்னணியை ஆதரிக்கும்: டத்தோஸ்ரீ சரவணன்
கோலாலம்பூர்:
மஇகா இப்போதைக்கு தொடர்ந்து தேசிய முன்னணியை முழுமையாக ஆதரிக்கும்.
மஇகா துணைத் தலைவர் டத்தோஸ்ரீ எம். சரவணன் இதனை கூறினார்.
மஇகாவின் தேசிய பேராளர் மாநாட்டிற்கு பின் கட்சியின் முதல் மத்திய செயலவைக் கூட்டம் இன்று நடைபெற்றது.
கட்சியின் தேசியத் தலைவர் டான்ஸ்ரீ விக்னேஸ்வரன் தலைமையில் இன்றைய கூட்டம் நடைபெற்றது.
இக்கூட்டத்தில் பல விவகாரங்கள் குறித்து முழுமையாக விவாதிக்கப்பட்டது.
குறிப்பாக மஇகாவின் அரசியல் எதிர்காலம் குறித்து விவாதிக்கப்பட்டது.
தேசியக் கூட்டணிக்கு டான்ஸ்ரீ மொஹைதின் யாசின் தலைவராக இருந்த போது அக்கூட்டணியில் இணையலாம் என கடந்த பேரவையில் மஇகா பேராளர்கள் வலியுறுத்தினர்.
ஆனால் இப்போது நிலைமை வேறு. தேசியக் கூட்டணிக்கு டான்ஸ்ரீ மொஹைதின் தலைவர் இல்லை.
அதே வேளையில் தலைமைத்துவத்தை அடிப்படையாக கொண்டே அரசியல் நகர்வுகள் இருக்க வேண்டும்.
ஆக இவ்விவகாரம் குறித்து கட்சி தொண்டர்களுடன் பேச வேண்டிய கட்டாயம் ஏற்பட்டுள்ளது.
இதனால் மஇகா இப்போதைக்கு தொடர்ந்து தேசிய முன்னணியை ஆதரிக்கும்.
அதே வேளையில் நடப்பு அரசாங்கத்தையும் மஇகா ஆதரிக்கும்.
ஒட்டுமொத்த மஇகா மத்திய செயலவையும் இந்த முடிவை எடுத்தது என்று டத்தோஸ்ரீ சரவணன் கூறினார்.
- பார்த்திபன் நாகராஜன்
தொடர்புடைய செய்திகள்
March 25, 2026, 6:09 pm
நாம் அமைதியாக இருந்தால், மக்கள் அதை உண்மை என்று நினைப்பார்கள்: டத்தோஶ்ரீ ரமணன்
March 25, 2026, 6:09 pm
நான் இன்னும் கேசியோ கைக்கடிகாரம் தான் அணிந்திருக்கிறேன்: ஃபஹ்மி
March 25, 2026, 6:08 pm
மேற்கு ஆசிய மோதல்; போர்நிறுத்தத்தின் முக்கியத்துவத்தை மலேசியா வலியுறுத்துகிறது: முஹம்மது ஹசான்
March 25, 2026, 6:07 pm
பெருநிறுவன மாபியா விவகாரம்; சட்ட அமலாக்க அமைப்பில் சதி உள்ளது: ரபிசி
March 25, 2026, 6:06 pm
விக்டர் சின் எங்கே இருக்கிறார் என்பது அதிகாரிகளுக்கு தெரியும்: சைபுடின் நசுதியோன்
March 25, 2026, 3:53 pm
மிஸ்டர் ஆர் நான் அல்ல; விக்டர் சின்னால் மட்டுமே பதிலளிக்க முடியும்: டத்தோஸ்ரீ ரமணன்
March 25, 2026, 3:05 pm
இறந்தவர்களின் சாம்பலுக்கும் மிரட்டலா?: நீலாயில் அரங்கேறிய பகீர் திருட்டு
March 25, 2026, 2:27 pm
