செய்திகள் மலேசியா
விக்டர் சின் எங்கே இருக்கிறார் என்பது அதிகாரிகளுக்கு தெரியும்: சைபுடின் நசுதியோன்
கோலாலம்பூர்:
பெருநிறுவன மாபியா நடவடிக்கைகளுடன் தொடர்புடைய தொழிலதிபர் விக்டர் சின் எங்கே இருக்கிறார் என்பது அதிகாரிகளுக்குத் தெரியும்.
உள்துறை அமைச்சர் டத்தோஶ்ரீ சைபுடின் நசுதியோன் இஸ்மாயில் இதனை இன்று உறுதிப்படுத்தினார்.
அந்த நபர் இப்பகுதியில் இருக்கிறாரா என்று கேட்டதற்கு, தனது தரப்பு விரைவில் இதுகுறித்த தகவலை வெளியிடும்.
ஆம், அவர் எங்கே இருக்கிறார் என்பது எங்களுக்குத் தெரியும். நாங்கள் உங்களுக்குப் பின்னர் தெரிவிப்போம் என்று அவர் இன்று நடைபெற்ற 219ஆவது போலிஸ் தின நிகழ்ச்சிக்கு பிறகு நடந்த செய்தியாளர் சந்திப்பில் கூறினார்.
அந்தத் தொழிலதிபர் தற்போது வெளிநாட்டில் இருக்கிறார் என்பதை போலிஸ்படைத் தலைவர் டத்தோஶ்ரீ முகமது காலித் இஸ்மாயில் உறுதிப்படுத்தியதாக முன்னதாக செய்தி வெளியிட்டிருந்தது.
காஜாங்கில் உள்ள கெமென்சா, சுங்கை லாங் பகுதிகளைச் சுற்றி, விக்டர் சின்னுக்குச் சொந்தமான பல இடங்களில் போலிஸ் முன்னதாக சோதனை நடத்தியிருந்தது.
விக்டர் சின்னின் கடப்பிதழை ரத்து செய்ய உள்துறை அமைச்சு நடவடிக்கை எடுக்குமா என்பது குறித்து கருத்து தெரிவித்த சைபுடின்,
அது தற்போது போலிஸ், பாதுகாப்புத் துறை ஆணையம் நடத்தி வரும் விசாரணையின் முடிவுகளைப் பொறுத்தது என்று கூறினார்.
- பார்த்திபன் நாகராஜன்
தொடர்புடைய செய்திகள்
March 25, 2026, 7:02 pm
பாசார் செனியில் 12 வயது சிறுவன் மீது கொடூரத் தாக்குதல்
March 25, 2026, 6:09 pm
நாம் அமைதியாக இருந்தால், மக்கள் அதை உண்மை என்று நினைப்பார்கள்: டத்தோஶ்ரீ ரமணன்
March 25, 2026, 6:09 pm
நான் இன்னும் கேசியோ கைக்கடிகாரம் தான் அணிந்திருக்கிறேன்: ஃபஹ்மி
March 25, 2026, 6:08 pm
மேற்கு ஆசிய மோதல்; போர்நிறுத்தத்தின் முக்கியத்துவத்தை மலேசியா வலியுறுத்துகிறது: முஹம்மது ஹசான்
March 25, 2026, 6:07 pm
பெருநிறுவன மாபியா விவகாரம்; சட்ட அமலாக்க அமைப்பில் சதி உள்ளது: ரபிசி
March 25, 2026, 4:21 pm
கடும் வெயிலால் நீடிக்கும் தண்ணீர் தட்டுப்பாடு: செபாட்டிக் தீவில் அவசரநிலை அறிவிப்பு
March 25, 2026, 4:19 pm
'ஹர்ராஸ் கும்பல்' அதிரடியாகக் கைது: திருடுபோன பல வாகனங்களை மீட்டது மலாக்கா போலிஸ்
March 25, 2026, 4:09 pm
'ஓப்ஸ் பந்தாவ்' அதிரடி சோதனை: 3,800-க்கும் மேற்பட்ட வெளிநாட்டவர்கள் சோதனைக்கு உட்படுத்தப்பட்டனர்
March 25, 2026, 4:05 pm
