செய்திகள் மலேசியா
இறந்தவர்களின் சாம்பலுக்கும் மிரட்டலா?: நீலாயில் அரங்கேறிய பகீர் திருட்டு
நீலாய்:
இந்த மாவட்டத்திலுள்ள ஒரு நினைவு பூங்காவில் நடந்த சாம்பல் கலசங்கள் திருட்டு வழக்கு, பணயத்தொகை மிரட்டல் வழக்கு தொடர்பான விசாரணையைப் போலிஸ் இன்னும் தொடர்ந்து வருகிறது.
இதுவரை திருடப்பட்ட நான்கு சாம்பல் கலசங்கள் மீட்கப்பட்டுள்ளதாக நீலாய் மாவட்ட போலிஸ் தலைவர் சூப்பிரண்டண்ட் ஜோஹாரி யஹ்யா கூறியுள்ளார்.
"இதுவரை விசாரணை தொடர்ந்து வருகிறது, போலிஸ் வழக்கு தொடர்பான சாட்சிகளின் வாக்குமூலம் பதிவு செய்வதை முடித்துக்கொண்டிருக்கிறது. இதுவரை விசாரணைக்கு உதவும் வகையில் 10 சாட்சிகளின் வாக்குமூலம் பதிவு செய்யப்பட்டுள்ளது.
"இதுவரை நான்கு சாம்பல் கலசங்கள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன. எனினும் முழுமையான உறுதிப்படுத்தலும் ஒட்டுமொத்த சரிபார்ப்பும் இன்னும் நிர்வாகத்தினரால் மேற்கொள்ளப்படுகிறது" என்று அவர் தெரிவித்தார்.
தொடர்புடைய அனைத்து விசாரணை கோணங்களையும் ஆய்வு செய்வது உட்பட விசாரணை முழுமையாக நடத்தப்படுவதாகம் அவர் தெளிவுபடுத்தினார்.
மேலும், ஜொகூரின் கூலாயில் முன்பு நடந்த சாம்பல் கலசங்கள் திருட்டு வழக்குடன் தொடர்புடையதா என்பது குறித்து கேட்டபோது, போலிஸ் ஒப்பீடு, பகுப்பாய்வு மேற்கொண்டு வருவதாகவும், ஆனால் இதுவரை எந்த தொடர்பும் உறுதிப்படுத்தப்படவில்லை என்றும் கூறினார்.
"போலிஸ் தொழில்நுட்ப உதவியை நாடுவதுடன் தொடர்பு, பரிவர்த்தனை அம்சங்கள் உட்பட மேலும் ஆய்வு மேற்கொண்டு வருகிறது.
"மேலும் எந்த முன்னேற்றமும் இடைவிடாமல் தெரிவிக்கப்படும்" என்று அவர் தெரிவித்தார்.
முன்னதாக வெளியிடப்பட்ட ஊடகங்களின் செய்தியின்படி, கடந்த மாதம் நீலாயிலுள்ள ஒரு நினைவு பூங்காவில் சாம்பல் கலசங்கள் திருடப்பட்டது, திருடப்பட்ட பொருட்களை திருப்பித்தர பணம் கோரும் மிரட்டல் தொடர்பாக போலிஸ் விசாரணை மேற்கொண்டு வருகிறது.
ஆரம்பக்கட்ட விசாரணையில் சந்தேகநபர் வெளிநாட்டு எண்ணிலிருந்து வாட்ஸ்ஆப் மூலம் நிர்வாகத்தைத் தொடர்புகொண்டு சாம்பல் கலசங்களைக் கண்டுபிடித்ததாக கூறியது தெரியவந்ததாக ஜோஹாரி கூறினார்.
பிறகு சந்தேகநபர் சாம்பலைத் திரும்பப்பெறுவதற்கான நிபந்தனையாக பணம் கோரியதாக கூறப்படுகிறது.
இதற்கு முன்பு அந்த நினைவு பூங்காவின் நிர்வாகம், கம்போடியாவை தளமாகக் கொண்ட மோசடி கும்பல் இந்த மிரட்டல் வழக்கில் ஈடுபட்டிருப்பதாக நம்புவதாக தெரிவித்தது.
-சங்கீர்த்தனா
தொடர்புடைய செய்திகள்
March 25, 2026, 6:09 pm
நாம் அமைதியாக இருந்தால், மக்கள் அதை உண்மை என்று நினைப்பார்கள்: டத்தோஶ்ரீ ரமணன்
March 25, 2026, 6:09 pm
நான் இன்னும் கேசியோ கைக்கடிகாரம் தான் அணிந்திருக்கிறேன்: ஃபஹ்மி
March 25, 2026, 6:08 pm
மேற்கு ஆசிய மோதல்; போர்நிறுத்தத்தின் முக்கியத்துவத்தை மலேசியா வலியுறுத்துகிறது: முஹம்மது ஹசான்
March 25, 2026, 6:07 pm
பெருநிறுவன மாபியா விவகாரம்; சட்ட அமலாக்க அமைப்பில் சதி உள்ளது: ரபிசி
March 25, 2026, 6:06 pm
விக்டர் சின் எங்கே இருக்கிறார் என்பது அதிகாரிகளுக்கு தெரியும்: சைபுடின் நசுதியோன்
March 25, 2026, 3:53 pm
மிஸ்டர் ஆர் நான் அல்ல; விக்டர் சின்னால் மட்டுமே பதிலளிக்க முடியும்: டத்தோஸ்ரீ ரமணன்
March 25, 2026, 2:27 pm
